பெங்களூரு காங்கிரஸ் ஆளும் கர் நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவா ரங்களில் சிக்மகளூரு, குடகு, உடுப்பி, ஷிவமொக்கா உள்ளிட்ட 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களும் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாகும். நக்சல் அமைப்பின் தலைவராக இருந்த உடுப்பி மாவட்டம் கார்கலா பகுதி யைச் சேர்ந்த விக்ரம் கவுடா, கடந்த டிசம்பர் மாதம் “நக்சல் ஒழிப்பு படை யினர்” என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்தவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். இந்நிலையில், தப்பி சென்ற வர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தாமல் சரணடைந்தால் மறு வாழ்வுக்கு உதவி செய்வதாக கர்நாடக அரசு அறிவித்தது. 5 நாட் களுக்கு முன் மாநில அரசு சார்பில் முற்போக்கு சிந்தனையாளர்கள், முன்னாள் நக்சல் குழுவினர் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிக்குள் சென்று 6 நக்சல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சித்தராமையாவுக்கு பாராட்டு
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து 6 நச்சல்களும் சரணடைய ஒப்புக் கொண்டனர். இதன்படி புதன்கிழ மை இரவு 7:15 மணிக்கு பெங்களூ ரில் உள்ள முதல்வரின் அலுவல கமான கிருஷ்ணா இல்லத்தில் சித்தராமையா முன்னிலையில் 6 நக்சல்களும் சரணடைந்தனர். சரணடைந்தவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வசந்த் (வேலூர் மாவட்டம் - ஆற்காடு) என்பவரும் அடங்குவார். மோதல் மற்றும் தாக்குதலை கையிலெடுக்காமல் முற்போக்கு சிந்தனையாளர்கள், முன்னாள் நக்சல் குழுவினர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி நக்சல்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடு செய்த கர்நாடக முதல்வர் சித்த ராமையாவின் முயற்சிக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மோடி அரசின் முயற்சிக்கு செக்
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தின் மலைப் பகுதிகள் வள மிக்கவை ஆகும். பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மலைப் பகுதியை கைப்பற்றி தனது நண்பர் அதானிக்கு தாரை வார்க்கவே “நக்சல் வேட்டை” என்ற பெயரில் அங்கு வாழும் பழங்குடி மக்களை மத்தியப் படைகள் மூலம் மோடி அரசு கொன்று குவித்து வரு கிறது. இந்நிலையில், கர்நாடக அரசைப் போல அமைதியான முறையில் நக்சல் வேட்டையில் ஈடுபட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், அதிக உயி ரிழப்பு ஏற்படுவதால் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் வேட்டையை கைவிட்டு அமைதி மற்றும் மறு வாழ்வுக்கான பேச்சுவார்த்தையே சிறந்தது என நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதானிக்காக மலைப்பகுதியை கைப்பற்றும் மோடி அரசின் முயற்சிக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தனது நல்லெண்ண முயற்சி மூலம் செக் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.