states

அந்தமானில்  மிதமான நிலநடுக்கம்

அந்தமானில்  மிதமான நிலநடுக்கம்

நாட்டின் ஒரு பகுதியான அந்த மான் நிக்கோபார் தீவுகள் வங்கக் கடல் பகுதியில் உள்  ளது. இந்த அந்தமான் கடல் பகுதியில்  ஞாயிறன்று நண்பகல் 12 மணி அள வில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வு 90 கி.மீ ஆழத்தில்  ஏற்பட்டது. கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், சுனாமி எச்சரிக்கை எது வும் வெளியிடப்படவில்லை. அதே போல  உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்பாக உடனடி அறிக்கைகள் எது வும் வெளியாகவில்லை. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்திய - ஆஸ்திரேலியன் தட்டு மற்றும் பர்மா (மியான்மர்) தட்டு  ஆகியவற்றின் குவிதல் எல்லையில் (Convergent Boundary) அமைந்துள்ள தன் காரணமாக, இந்த பிராந்தியத்தில் மிதமான மற்றும் வலுவான நிலநடுக் கங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.