இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண் வெளித் துறை செயலராகவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் வி.நாரா யணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய தலைவராக டாக்டர் வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 11ஆவது தலைவரான டாக்டர் வி.நாராயணன் வரும் ஜனவரி 14ஆம் தேதி முறைப் படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் வழி அரசுப் பள்ளி மாணவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்கட்டுவிளை என்ற கிராமத்தில் விவசாயி சி.வன்னியப் பெருமாள், எஸ்.தங்கம்மாள் தம்ப திக்கு மகனாக பிறந்தவர் தான் வி.நாராயணன். இவருக்கு 3 சகோ தரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ள னர். சகோதரர், சகோதரிகளுடன் அப் பகுதியில் இருந்த அரசுப் பள்ளியில் பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்தார் வி.நாராயணன். சிறுவய தில் அவர் வீட்டில் மின்சார வசதி கூட கிடையாது. நாராயணன் 9ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் அவர் வீட்டிற்கு மின்சார வசதி கிடைத்தது
முதல் மாணவர்
தனது 10ஆம் வகுப்பில் பள்ளி யில் முதலிடம் பெற்ற நாராயணன், அருகிலேயே 12ஆம் வகுப்பை முடித்து காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) கிரையோஜெனிக் பொறியி யல் (Cryogenic Engineering) படிப்பில் 1989ஆம் ஆண்டு முதல் மாணவராக எம்.டெக் பட்டம் பெற் றார். மேலும் 2001ஆம் ஆண்டு கடி னமான விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) பிரிவில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.
1984ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ
1984ஆம் ஆண்டு இஸ்ரோவில் நாராயணன் இணைந்தார். சுமார் 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்பு களில் வி.நாராயணன் பணியாற்றி யுள்ளார். ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபு ணத்துவம் பெற்ற வி.நாராயணன், பிஎஸ்எல்வி சி-57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா, ஜிஎஸ்எல்வி எம்.கே 3, சந்திரயான் 2,3 திட்டங்களில் பணி யாற்றியுள்ளார். 183 திரவ உந்துவிசை திட்டம், கட்டுப்பாட்டு அமைப்புகளை வி.நாராயணன் தலைமையிலான குழு இஸ்ரோவுக்கு வழங்கியது. தற் போது கேரளம் தலைநகர் திருவனந்த புரம் அருகே வலியமலாவில் உள்ள திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக உள்ளார். இஸ்ரோவில் அதிக சம்பளம் வழங்கப்படுவது தலைவர் பதவி. இதன் அடிப்படைச் சம்பளம் ரூ.2,25,000. இதர படிகள் உள்பட மொத்தம் ரூ.2.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். எம்.டெக் படிக்கும்போது ஐஐடி காரக்பூரில் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கத்தின் தங்கப் பதக்கம், இஸ்ரோவின் சிறந்த சாத னையாளர் விருது, இஸ்ரோவின் சிறந்த குழு விருது, சத்தியபாமா பல் கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்டவை வி.நாராய ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவும்... தமிழர்களும்...
இஸ்ரோவில் தமிழர்கள் முக்கியப் பங்காற்றி வருவது நாடறிந்த விஷயம் ஆகும். “ரோகிணி-2” செயற்கைக்கோளை ஏவிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ராக்கெட்டுகளுக்கான திட எரிபொருள் ஆராய்ச்சியில் அவரது பங்கு மிக முக்கியமானது. “சந்திரயான்-1” மங்கள்யான் செயற்கைக்கோள்களுக்கான திட்ட இயக்கு நராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார். “ஜிசாட்-12” பணியின் திட்ட இயக்குநராக ந.வளர்மதி, இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவன் ஆகியோர் பணியாற்றினர். இவரது பதவிக் காலத்தில் தான் முதன் முதலாக சந்திரயான் நிலவுக்கு அனுப்பப் பட்டது. “சந்திரயான்-2” பணியின் திட்ட இயக்குநராக வனிதா முத்தையா பணி யாற்றினார். சூரியனை ஆராயும் ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராக நிகர் ஷாஜி, நில வின் தென் துருவத்தைச் சென்றடைந்த முதல் நாடு என்கிற பெருமைக்குரிய சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநராக பி.வீரமுத்துவேல் என பல தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.