states

img

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவரும், மாநி லங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லி கார்ஜுன கார்கே (83) நெஞ்சுவலி காரண மாக பெங்களூருவில் (கர்நாடகா) உள்ள  எம்.எஸ்.ராமையா தனியார் மருத்துவ மனையில் அக்.,1 ஆம் தேதி அனுமதிக் கப்பட்டார். பரிசோ தனைக்குப் பிறகு கார்கேவிற்கு சீரற்ற இதய துடிப்பு இருப்பதால், அவருக்கு  இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி (இதய துடிப்பை சீராக்கும் கருவி) பொருத்த வேண்டும் என்றும், உடனடியாக இதற் காக அறுவைச் சிகிச்சை செய்ய வேண் ண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். இந்த தகவலை கார்கேவின் மகனும்,  கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கார்கேவின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடி கார்கேவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலமாக நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.