இனவெறியை எதிர்த்து சர்வதேச மாணவர் உரிமையை பாதுகாப்போம்! இந்திய மாணவர் சங்க இங்கிலாந்து மாநாடு முடிவு
லண்டன் இந்திய மாணவர் சங்கத்தின் இங்கிலாந்து கிளையின் 3 ஆவது மாநாடு, கடந்த நவம்பர் 29, சனிக்கிழமை அன்று குரோய்டன் நகரில் உள்ள ரஸ்கின் ஹவுஸில் நடந்தது. இம்மாநாட்டில் இனவெறியை எதி ர்த்து சர்வதேச மாணவர்களின் உரிமையை பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லண்டன், லீட்ஸ், எடின்பர்க், லீசெஸ்டர் ஆகிய நான்கு மாவட்டக் குழுக்களின் பிரதிநிதி கள் உட்பட ஏழு நகரங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்திய மாணவர் சங்க இங்கிலாந்து கிளை யின் செயலாளர் டாக்டர் நிகில் வி மேத்யூ, அரசி யல் ஸ்தாபன அறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், இங்கிலாந்து மற்றும் இந்தி யாவின் குறிப்பிட்ட சூழல்களின் அடிப்படை யில் அமைப்பின் பணிகள் மற்றும் அதன் தனித்து வமான பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. பாலஸ்தீனம், கியூபாவிற்கு ஆதரவு மற்றும் இங்கிலாந்தில் அதிகரித்து வரும் இனவெறி பிரச்சாரம், சகிப்புத்தன்மையற்ற சூழலில் சர்வ தேச மாணவர்களின் உரிமைகளைப் பாது காப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள கியூபா தூதரகத்தின் செயலாளர் கார்லோஸ் ரஃபேல் ரோட்ரிக்ஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், பிரிட்டன் இளம் கம்யூனிஸ்ட் லீக், கரீபியன் தொழிலாளர் ஒற்றுமை, சுதந்திர ஆய்வு கள் நிறுவனம், கைரளி நிறுவனத்தின் இங்கி லாந்து பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சிறப்பு மாநாட்டின் விருந்தினர்களாக பங்கேற்ற னர். இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம்.சஜி கூட்டத்தில் உரை யாற்றினார். இம்மாநாட்டில் நூபுர் பாலிவால் தலைவரா கவும், சோமிஹா சாட்டர்ஜி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 15 உறுப்பி னர்களைக் கொண்ட குழுவும், அதில் 5 உறுப்பி னர்களைக் கொண்ட செயற்குழுவும் தேர்ந்தெ டுக்கப்பட்டது.
