states

பாஜகவின் உத்தரவை நிராகரிக்கும் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்  

பாஜகவின் உத்தரவை நிராகரிக்கும் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்  

சஞ்சார் சாத்தி செயலியை கைப் பேசிகளில் முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை நிராக ரிக்கப் போவதாக ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளன.  பாஜக அரசின் இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த மக்களையும் உளவு பார்க்க வழிவகுக்கும் என்ற கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் ஆப்பிள் நிறு வனம் இந்த உத்தரவுக்கு இணங்கப் போவதில்லை என்றும், இது போன்ற கட்டாய உத்தரவுகளை உலகில் வேறு எந்த நாடுகளும் பின்பற்றவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்த உத்தரவைப் பின்பற்றினால் அது நிறுவனத்தின் தனியுரிமை கொள் கைகள் மீது நம்பிக்கை கேள்விக்குறியா கும். வர்த்தகம், கைபேசி விநியோகம் பாதிக்கும் என்ற சூழலில் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் இந்த நடவடிக்கை யை ஏற்க மறுத்து வருகின்றன.