மாற்றுத் திறனாளிகளுக்கு உரிமைகள் அடிப்படையிலான செயல்திட்டங்கள்
நிதி உதவிகள் அதிகரிக்க வேண்டுகோள்
புதுதில்லி மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவிகள் அதிகரிக்கப்பட வேண் டும். அதேபோல அவர்களுக்கான உதவிகள் வெறும் உதவி நடவடிக்கைகள் என்ற மனநிலையில் இருந்து மாறி உரிமைகள் அடிப்படையிலான செயல்திட்டங்களாக வடிவ மைக்கப்பட வேண்டும். உலக மக்கள் தொகையில் சுமார் ஆறில் ஒரு பங்கு மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மையி னராகவே உள்ளனர். குறிப்பாக வளரும் நாடுகளில் இந்த அவலம் தொடர்கிறது. இந்தியாவிலும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் நீதித்துறைகளில் இவர்களின் அணுகல், பாலினம், சாதி, வர்க்கம் போன்ற காரணிகளால் மேலும் புறக்கணிக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு இடைவெளியானது, தொண்டு மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) துறையிலும் பிரதிபலிக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான தேவை மிக அதிகமாக இருந்தபோதும், உலகளாவிய மேம்பாட்டு நிதியில் வெறும் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இத்துறைக்குக் கிடைக்கிறது. இதில் மிகச் சிறிய சதவீதமே இந்தியாவிற்கு அல்லது மாற்றுத் திறனாளிகளால் நடத்தப் படும் நிறுவனங்களுக்கு வந்து சேர்கிறது. இவற்றுடன் அரசின் ஒதுக்கீடுகளும் செயல்பா டுகளும் போதுமானதாக இல்லை. நிதியுதவியில் ஏன் புறக்கணிப்பு ? மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன், இந்தியாவில் மாற்றுத் திறனாளிக ளின் உரிமைகள் சட்டம்- 2016 உள்ளது. சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், நிதியளிப்பு மற்றும் செயல்பாட்டு அணுகுமுறைகள் இன்னும் உரிமைகள் அடிப்படையிலானதாக மாறாமல், பழைய நலத்திட்டங்கள் சார்ந்த மனப்பான் மையிலேயே உள்ளன. கல்வி, சுகாதாரம் மற்றும் பாலினம் போன்ற துறைகளில் பெரும் முதலீடு செய்யப்பட்டா லும், மனநலம் சார்ந்த மற்றும் வெளியில் தெரி யாத குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனா ளிகளின் நிதி சார்ந்த நலன்களில் இருந்து இன்னமும் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் முழுப் பங்கேற்பு க்குத் தேவையான சைகை மொழிபெயர்ப்பாளர் அல்லது தனிப்பட்ட உதவியாளர் போன்ற செலவுகள், நிதி ஒதுக்கீட்டில் பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளை “பயனாளிகள்” என்று மட்டும் பார்க்காமல், சமூக மாற்றத் திற்கான தலைவர்கள் மற்றும் கூட்டாளிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதேபோல், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரிவுகளை (பாலினம், சாதி, வர்க்கம்) கணக்கில் கொண்டு அனைவரையும் உள்ள டக்கிய அணுகுமுறையுடன் நிதியுதவி வழங்கப் பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
