states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன்

ஈரான் உயர் தலைவர் காமேனி காய்ச்சல் காரணமாக இறந்து போனதைப் போல “ஆழ்ந்த கவலை” என்ற வார்த்தையை பயன்படுத்தினார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய  தாக்குதலுக்கு  “The Epic Fury” அதாவது “மகாகோபம்” என்று அர்த்தம். இந்த தாக்குதலை கண்டிக்க திறனற்று மோடி அரசு இன்று தாக்கல் செய்த அறிக்கை “ மகா அவமானம்”.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

ஒருபுறம் சுயச்சார்பு பற்றிப் பேசும் மோடி அரசு, மறுபுறம் அமெரிக்காவின் உத்தரவுகளுக்குப் பணிந்து நடக்கிறது. நாம் எவ்வளவு எண்ணெய் வாங்க வேண்டும், எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டும் என்பதை  தீர்மானிக்க டிரம்ப் யார்? அவருக்கு ஏன் மோடி பணிந்து செல்கிறார்?

ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சதா

தற்போது நாட்டின் ஒரு சில விமான நிலையங்க ளில் மட்டுமே ‘உடான் யாத்ரி உணவகங்கள்’ மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. சாதாரணப் பயணிகள் மற்றும் பட்ஜெட் பயணிகளுக்குக் குறைந்த விலையில் உணவு வழங்கும் இத்தகைய உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா

மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. தாக்குதல் சம்பவங்கள் வேறு மாதிரியாக உள்ளன. இந்தியா வின் எரிசக்தி விநியோகச் சங்கிலி, ராஜதந்திர உறவு கள் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படப் போகும் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தில்  விவாதிக்க வேண்டும்.