states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது தெரிய வந்தவை, உறுதியான கட்டமைப்பு இல்லை, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட திட்டம் இல்லை, நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லை, பொது உரையாடல் இல்லை. இது மோடி அரசின் அப்பட்டமான துரோகமாகும்.

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் மோசமடைவது போன்ற ‘உண்மையான’ பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றம் எப்போது விவாதிக்கும்? 150 ஆண்டுகள் பழமையான தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கு 10 மணி நேர விவாதம். ஆனால் இன்றைய இந்தியாவின் பிரச்சனைகளுக்கு கொஞ்ச நேரம் எப்படி போதுமானதாக இருக்கும்?  

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா 

நாட்டில் உள்ள இரு உளவாளிகள் முதலில் விஐபிகள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை உளவு பார்க்க பெகாசஸைக் கொண்டு வந்தார்கள். இப்போது  சாதாரண மக்களை உளவு பார்க்க சஞ்சார் சாத்தியைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் நோக்கம் தான் என்ன?

திரிணாமுல் எம்பி கோகலே 

இந்தியாவில் 811 நபர்களுக்கு 1 மருத்துவர் என்ற விகிதம் உள்ளது என பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களும் அடங்குவர்.மோடி அரசாங்கத்தின் கீழ் சுகாதாரப் பராமரிப்பு மோசமான நிலையில் உள்ளது.