மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்திட மாநிலங்களவைத் தலைவர் முன்வர வேண்டும்
சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் வேண்டுகோள்
புதுதில்லி மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, மாநிலங்கள வைத் தலைவர் முன்வர வேண்டும் என்று மாநிலங்களவையில் சிபிஎம் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள் அன்று தொடங்கியது. புதிதாக மாநி லங்களவைத் தலைவராகப் பொறுப் பேற்றுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தி மாநிலங்க ளவை உறுப்பினர்கள் உரை நிகழ்த்தினார் கள். அப்போது டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது: மாண்புமிகு தலைவர் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும், கேரளா சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கி றேன். தாங்கள் இடையில் உள்ள கட்சிகளின் கோரிக்கைகளை மட்டுமல்ல, இடதுசாரி சித்தாந்தம் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கோரிக்கைகளையும் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமர்வுகள், தரம் குறைவு நாடாளுமன்ற விவாதங்களின் தரம் தாழ்ந்துகொண்டிருப்பது குறித்து இங்கே யுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்தி ருக்கிற கட்சிகளுக்கு அப்பாற்பட்டுநின்று பேசும் இந்த சமயத்தில், அதனை மீட்டெ டுக்க வேண்டியது உங்கள் முக்கிய கடமை யாகும். ஆண்டுக்கு 135 அமர்வுகள் நடத்திக் கொண்டிருந்ததிலிருந்து, 55 அமர்வுகள் மட்டுமே நடத்தக்கூடிய அளவிற்கு வந்தி ருக்கிறோம். அப்போதும்கூட நடைபெற்ற விவாதங்களின் தரம் மிகவும் குறைந்தி ருக்கிறது. திராவிடக் கொள்கைகளில் வேரூன்றிய, அதுவும் எனது மாநிலமான கேரளாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட, உங்களைப் போன்ற ஓர் அனுபவம் வாய்ந்த மக்கள் தலைவரை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடை கிறேன். உங்கள் முன்னாள் கட்சியின் சார்பில், கேரளத்தின் அமைப்புப் பொறுப்பாளராக நீங்கள் இருந்ததால், நீங்கள் கேரளா முழுவ தும் பயணம் செய்துள்ளீர்கள், எனவே, நீங்கள் கேரள மாநிலத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ராதாகிருஷ்ணனின் பொருத்தமான கூற்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் ஆழமான மேற்கோளைக் குறிப்பிட்டார்கள். அதாவது, எதிர்க்கட்சிகள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் விமர்சிக்க அனுமதிக்கப் படாவிட்டால், ஜனநாயகம் கொடுங்கோன்மை மிக்கதாக மாறி சீரழிந்துவிடும் என்று அவர் கூறினார். அந்தக் கூற்று இன்றைய நாட்களில் மிகவும் பொருத்தமானது. அதை நீங்கள் நினைவில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதில் இன்று உங்கள் முதல் தலையீடு ஆளும்கட்சித் தரப்பு உறுப்பினர்களை அமரச் செய்ததுதான். நீங்கள் சரியான திசைவழியில் இருக்கிறீர்கள். இதனை நீங்கள் பின்தொடர்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற ஜனநாயகம் இரண்டு தூண்களைக் கொண்டுள்ளது. ஒன்று ஆட்சி புரிவோர் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லக்கூடிய பொறுப்பு உள்ளவர்கள். மற்றொன்று எதிர்க்கட்சி அமைப்பு. குறைந்த பட்சம் எதிர்க்கட்சியினர் கூறும் கருத்தை யாவது ஆளும்தரப்பினர் கேட்க வேண்டும். எனினும் நாங்கள் எங்கள் கருத்துகளைக்கூறக்கூட வாய்ப்பளிக்கப் படாமல் இருந்துள்ளோம். இது நம்மை இந்தக்காலத்தில் பீடித்துள்ள நோய் ஆகும். உறுப்பினர்கள் இடைநீக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டனர். இரு அவைகளிலும் மொத்தம் 206 முறை இது நடந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலக் கூட்டத் தொடரின்போது 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட னர். மேலும் இந்த அவையில் எதிர்க்கட்சி யினர் பங்கேற்பு இல்லாமல் முக்கியமான சட்டங்கள் கூட நிறைவேற்றப்பட்டன. அம்பேத்கர் கூறிய 3 முக்கியக் கடமைகள் மாண்புமிகு தலைவர் அவர்களே, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மேற்கோள் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் மாநிலங்க ளவையின் முக்கியத்துவம் குறித்துக் கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் மாநிலங்களவைக்கு மூன்று முக்கி யக் கடமைகளை அளித்துள்ளார். முதலாவ தாக, இந்த அவையானது மக்களவையால் நிறைவேற்றி அனுப்பப் படுவனவற்றிற்கு திருத்தங்கள் அளிப்பதற்கும், அவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதற்குமான ஓர் அவையாகும்.இந்தக் கடமையை நாம் சரிவர நிறைவேற்றி இருக்கிறோமா அல்லது அதன் அருகிலேயாவது நாம் சென்றிருக்கிறோமா? இரண்டாவது கடமை, மக்களவையில் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப் படுகின்றவைகளைத் தடுத்துநிறுத்தி அவற்றைச் சரியானவழியில் செயல்படுத்து வது என்பதாகும். மாண்புமிகு தலைவர் அவர்களே, தாங்கள் இந்த அவைக்குப் புதியவர் என்பதால் இந்த அவையில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பற்றி சுருக்கமாக தங்கள்முன் வைக்க விரும்புகிறேன். 2019 மற்றும் 2024க்கு இடையில், 34 சத வீத சட்டமுன்வடிவுகள் மாநிலங்களவையில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான விவாதத்து டன் நிறைவேற்றப்பட்டன. அதே காலகட்டத் தில், சுமார் 60 சதவீத சட்டமுன்வடிவுகள் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான விவா தத்துடன் நிறைவேற்றப்பட்டன. அவசர மற்றும் தவறாகக் கருதப்படும் சட்டங்களை கட்டுப்படுத்துவது பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறியது இதுதானா? இந்தக் கேள்வி உங்கள் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்று விரும்பு கிறேன். கூட்டாட்சிக் கட்டமைப்பில் மாநில உரிமை பாதுகாப்பு அடுத்து, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த அவையின் முக்கியக் கடமைகளில் ஒன்றாக கூட்டாட்சி கட்டமைப்பின்கீழ் மாநி லங்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இன்று மாநிலங்களின் நிலை என்ன? நமது மாநிலங்கள் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றன. (Our States have been bleeding.) நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். (We are pleading.) (குறுக்கீடுகள்)... எனவே, கூட்டாட்சித் தத்து வத்தின்கீழ் பிரச்சனைகள் வரும்போது இந்த அவையின் அணுகுமுறையைப் பற்றி தாங்கள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றேன். உங்கள் எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பயன் அளிக்கும் விதத்தில் சில புள்ளி விவரங்களைக் கூற விரும்புகிறேன். இது வரை 12 குடியரசுத் துணைத் தலைவர்களில், ஆறு பேர் நாட்டின் முதல் குடிமகனாக, குடிய ரசுத் தலைவராக, பணியாற்றி இருக்கிறார் கள். இந்த ஆறு பேர்களுமே எதிர்க்கட்சி நிறுவ னத்தை நிலைநிறுத்திட மேற்கொண்டிருந்த மனப்பான்மையாகும். இது உங்களுக்கு ஒரு சிறந்த உள்ளீடாக இருக்கும். நீங்கள் கூறிய 4 அம்சங்கள் 2025 அக்டோபர் 7 அன்று நீங்கள் கூறிய உங்கள் சொந்தக் கருத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன். நீங்கள் உங்கள் கருத்தை முன்வைக்கும்போது பேச்சுவார்த்தை (Dialogue), விவாதம் (Deliberation), கருத் துப்பரிமாற்றம் (Debate) மற்றும் கலந்துரை யாடல் (Discussion) ஆகிய 4 அம்சங்களை ஊக்குவிக்க நீங்கள் விரும்புவதாகச் சொன்னீர்கள். தலைவர் அவர்களே, இதில் நாங்கள் உங் பளை முழுமையாக ஆதரிக்கிறோம். நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம். உங்கள் வெற்றி இந்த அவை மற்றும் இந்த நாட்டின் வெற்றியாக இருக்கும். தலைவர் அவர்களே, உங்கள் மாமா ஒரு காங்கிரஸ்காரர். ஜெய்ராம்ஜியின் உத்தரவின் பேரில் பேசிய கார்கேஜி அவர்கள் மக்களவை யில் மூன்று முறை உறுப்பினராக இருந்த திரு.குப்புசாமி பற்றிப் பேசினார். நீங்கள் அதை மறந்தாலும், உங்கள் தாத்தா ஒரு கம்யூனிஸ்ட் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நன்றி.இவ்வாறு டாக்டர் ஜான் பிரிட் டாஸ் பேசினார். (ந.நி.)
