மேற்கு வங்கத்தில் இடது முன்னணி பிரம்மாண்ட பேரணி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம்
கொல்கத்தா ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிர தேசத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பது பஹல் காம். நாட்டின் மிகப்பெரிய கோடை மலைவாசஸ்தலமான பஹல் காமில் ஏப்ரல் 22 அன்று (செவ் வாய்) மாலை பயங்கரவாதிகள் இந்திய ராணுவ உடையில் சுற்று லாப் பயணிகள் மீது கோழைத்தன மாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்து - முஸ்லிம் என மொத்தம் 26 பேர் உயிரிழந்த னர். 20க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம், சமூக மோதல் மற்றும் பிளவுபடுத்தும் அரசிய லைக் கண்டித்து மேற்கு வங்க மாநி லம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடை பெற்றது. கொல்கத்தாவின் தர்மத லாவில் இருந்து சியால்டா வரை நடைபெற்ற இந்த பேரணியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநி லச் செயலாளருமான முகமது சலீம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய புரட்சிகர கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகளின் ஊழியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கா னோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இடது முன்னணியின் இந்த பேர ணியால் கொல்கத்தாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.