200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த “கார்ஸ் 24”
இந்தியாவை தலையிடமாக கொண்டு இயங்கும் கார்ஸ்24 (Cars24) நிறுவனம் பயன்படுத் திய கார்களை வாங்குதல், விற்பனை செய்தல், நிதியளித்தல், காப்பீடு, டிரைவர்-ஆன்-டிமாண்ட், பாஸ்டேக் (FASTag), சலான் மேலாண்மை மற்றும் ஸ்கிராப்பிங் என பல்வேறு சேவை களை வழங்குகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 200 ஊழியர்களை கார்ஸ் 24 நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி விக்ரம் சோப்ரா கூறு கையில்,”ஊழியர்களின் உழைப்பை நாங்கள் மதிக்கின்றோம். அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ப தற்காக பணிநீக்கம் செய்யவில்லை. நிறுவனத்தின் கட்டமைப்பை மேம் படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.