அமலாக்கத்துறை அலுவலகத்தில் திடீர் தீ
ஏக்நாத் ஷிண்டே - அஜித் பவார் ஆவணங்கள் அழிப்பு?
பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளது கைசெர்-ஐ-இந்த் காம்ப்ளக்ஸ். இந்த காம்ப்ளக் ஸில் அமலாக்கத்துறை அலுவகலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஞாயிறன்று அதிகாலை 3 அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் பல தீயில் கருகி சேதமடைந்திருக்க வாய்ப்பு அதிகம் என அமலாக்கத்துறை வட்டா ரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஏக்நாத் ஷிண்டே - அஜித் பவார்
இந்நிலையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் உள்ளிட்ட முக் கிய எதிர்க்கட்சித் தலைவர்களை தங்கள் கூட்டணி பக்கம் வளைக்க 2022ஆம் ஆண்டு முதல் பாஜக அமலாக்கத்துறை யை அடி ஆளாக பயன்படுத்தியது. அம லாக்கத்துறை மிரட்டல்களால் தற்போது ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் தற்போது பாஜகவின் நெருங்கிய கூட்டாளிகளாக ஆகிவிட்டனர். இதனால் மிரட்டலுக்கு பயன்படுத்த ஆவணங்களை எரிக்கவே இந்த தீ விபத்து நிகழ்த்தப்பட்டதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.