states

img

பஞ்சாப்பில் விரைவாக பயிர்களை அறுவடை செய்ய பிஎஸ்எப் உத்தரவு

பஞ்சாப்பில் விரைவாக பயிர்களை அறுவடை செய்ய பிஎஸ்எப் உத்தரவு

நீடிக்கும் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்

அமிர்தசரஸ் இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் மொத்த நீளம் 3,323 கிமீ ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் 547 கிமீ நீளமும், ராஜஸ்தானில் 1,035 கிமீ, குஜராத்தில் 512 கிமீ, லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இரண்டிலும் 1,216 கிமீ என 3 மாநிலம், 2 யூனியன் பிர தேசங்களில் 3,323 கிமீ நீளத் தில் பாக்கிஸ்தான் எல்லை உள்ளது.  இத்தகைய சூழலில் பஹல்காம் தாக்குதல் சம்ப வத்தால் இந்தியா - பாகிஸ் தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வரு கிறது. இதனால் பஞ்சாப் மாநி லத்தில் 2 நாட்களில் கோதுமை  பயிர்களை அறுவடை செய்து  வயலை காலி செய்ய வேண்  டும் என பாகிஸ்தான் எல்லைக்  கிராம விவசாயிகளுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை  (பிஎஸ்எப்) உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் மாநில குருத்துவாராக்களுக்கு பிஎஸ்எப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய எல்லைக் கம்பி வேலிக்கு அப்பால் பயிரிடப்பட்ட கோது மைப் பயிரை இரண்டு நாட்க ளுக்குள் அறுவடை செய்து, வயலை காலி உடனடியாக செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பயிரை அறுவடை செய்யப்படாவிட்டால், எல்  லைக் கதவுகள் முழுமை யாக மூடப்படும். எனவே விவ சாயிகள் 48 மணி நேரத்திற்  குள் தங்கள் பயிரை அறுவடை  செய்து பாதுகாக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குருத்துவாராக்கள் இந்த தக வலை விவசாயிகளுக்கு அளித்துள்ளனர். பிஎஸ்எப்பின் இந்த உத்தரவை அடுத்து பஞ்சாப் விவசாயிகள் தற்  போது கோதுமை பயிர்களை  அறுவடை செய்யும் வேலை யைத் தொடங்கியுள்ளனர்.

பஞ்சாப்பில்  பலத்த பாதுகாப்பு

பஞ்சாப்பின் அமிர்தசரஸ், பெரோஸ்பூர், குருதாஸ்பூர், பதான்கோட் மாவட்டங்கள் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி யுள்ளன. இதனால் இந்த  4 மாவட்டங்களில் எல்லைப்  பாதுகாப்பு படை மற்றும் ராணு வம் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகிறது.