சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்து துயருற்ற நிலையிலும், “தங்கை போல” அரவணைத்து மரண அறையில் தனக்கு துணையாக இருந்த இரு காஷ்மீரி இளைஞர்களின் நட்பை நன்றியுடன் நினைவு கூர்ந்த ஆர்த்தி கேரளாவின் மதச்சார்பின்மை பண்புக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்
அனைத்து இந்தியர்களும் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் பஹல்காம் சம்பவத்தை மூடி மறைக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. சம்பவம் நடந்த போது பஹல்காமில் இந்திய உளவு அமைப்புகள் எங்கே சென்றன? ராணுவ வீரர்கள் ஏன் அங்கு இல்லை? இதற்கு இன்று வரை பதில் இல்லை.
சிவசேனா (உத்தவ்) செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே
அரசியலில் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் நாங்கள் அரசுடன் உறுதுணையாக இருப்போம். அதே போன்று பயங்கரவாத சம்பவத்தால் எங்கள் காஷ்மீரி சகோதர - சகோதரிகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா
பஹல்காம் தாக்குதலுக்கு மக்கள் தான் காரணம் என ஒன்றிய பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள் ளார். பேசிப் பேசி தன்னுடைய முட்டாள்தனத்தை உறுதிப்படுத்துவ தற்கு பதிலாக, பியூஷ் கோயல் அமைதியாக இருந்து விடுவது மேல்.