states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

பிரதமர் மோடி “டெலி பிராம்ப்டரை”  பார்த்து உரையாற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில், நமது நாட்டின் போட்டியாளர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வருகின்றனர். நம் நாட்டிற்கு வலுவான கட்டமைப்பு வேண்டுமே தவிர, வெற்று வார்த்தைகள் அல்ல.

ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

ல்லி மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் பாஜக மக்களுக்காகப் பணியாற்றத் தொடங்க வேண்டும். தில்லி மக்களுக்கு பாஜக பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. மிக முக்கியமான வாக்குறுதி என்னவென்றால் மார்ச் 8 முதல் பெண்க ளுக்கு மாதம் ரூ. 2,500 திட்டம் தான். பாஜகவினர் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

பிப்ரவரி 8ஆம் தேதி தில்லி தேர்தல் முடிவுகள் வெளியாகின. அங்கு பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. ஆனால் தற்போது வரை தில்லி முதலமைச்சர் யார் என்று யாருக்கும் தெரியாது. பிரதமர் பிசியாக இருப்பதால், அவரால்  முதலமைச்சர் பெயரை அறிவிக்க முடியவில்லை. இது பரிதாபமான விசயம்.

மகாராஷ்டிரா சமாஜ்வாதி தலைவர் அபு அசிம்

முஸ்லிம் இளைஞர்களும், பெண்களும் இந்து மதத்திற்கு மாறி இந்துக்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அதே போல இந்து ஆண்களும் பெண்களும் முஸ்லிம்களை திருமணம் செய்கிறார்கள். இது அரசிய லமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை. ஆனால் பாஜக இதற்கு எதிராக அரசியல் செய்கிறது