கேரளம் : அமீபா காய்ச்சலுக்கு பெண் பலி
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியைச்சேர்ந் தவர் வினயா (வயது 26). வலிப்பு ஏற்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனை யில் வினயாவுக்கு அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்ட றியப்பட்டது. இதையடுத்து வெண்டி லேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த வினயா வியாழனன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.