states

img

ரூ.1,158 கோடி கல்வி நிதி பெற உரிமை உண்டு ஒன்றிய அரசுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம்

ரூ.1,158 கோடி கல்வி நிதி பெற உரிமை உண்டு ஒன்றிய அரசுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்  சமக்ர சிக்சா நிதியை கேரளா விற்கு உடனடியாக ஒதுக்குமாறு  அமைச்சர் வி.சிவன்குட்டி ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். ரூ.1158 கோடி  கல்வி நிதி பெற கேரளத்திற்கு உரிமை  உண்டு என்பதை ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டி, கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் வி.சிவன் குட்டி செய்தியாளர்களிடம் மேலும் கூறு கையில்,”கடந்த இரண்டரை ஆண்டு களாக சமக்ர சிக்சாவிற்கு ஒன்றிய அரசு  நிதி ஒதுக்கவில்லை. நீண்ட இடை வெளிக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் நிதி கிடைத்தது. 2025-26ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.456 கோடியில், முதல் தவணையாக ரூ.92.41 கோடி ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.  கல்வி உரிமைச் சட்டத்தின் நிதி  மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்  கான நிதியை உடனடியாக ஒதுக்க ஒன்  றிய அரசுக்கு ஒரு திட்டம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டு முதல்  கேரளா ரூ.440.87 கோடியைப் பெற உரிமை உள்ளது. 2025-26 உட்பட 2023-24  ஆம் ஆண்டின் மூன்றாவது தவணையிலி ருந்து மொத்தம் ரூ.1,158 கோடியை ஒன்  றிய அரசிடமிருந்து மாநிலம் பெற  வேண்டி உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாகப் பெறப்பட்ட  நிதி குழந்தைகளின் அடிப்படைத்  தேவைகளுக்குப் பயன்படுத்தப்படு கிறது. இலவச சீருடைகள், பாடப்புத்த கங்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டி யல் பழங்குடியினரைச் சேர்ந்த குழந்தை களுக்கான விடுதிச் செலவுகள், இந்தப்  பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக் கான பயணச் சலுகைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லாத  குழந்தைகளுக்கு பயிற்சி, பெண் குழந் தைகளுக்கான விடுதிச் செலவுகள் மற்றும் பள்ளி பராமரிப்பு ஆகியவற்றின் ஒன்றிய அரசின் பங்கினைப் பெற மாநி லத்திற்கு உரிமை உண்டு.  இரண்டரை ஆண்டுகளாக சமக்ர சிக்சா கல்வியின் ஒரு பகுதியாக ஆட்டிசம்  மையத்தின் செயல்பாடுகள் மற்றும் ஊழி யர்களின் சம்பளத்திற்கு மாநில அரசு நிதி வழங்கி வருகிறது. சமக்ர சிக்சா கல்வி யின் ஒரு பகுதியாக மாநிலத்தில் 169  ஆட்டிசம் மையங்கள் இயங்கி வரு கின்றன. சராசரியாக, ஒவ்வொரு மையத்  திலும் 60 குழந்தைகளுக்கு சேவை செய்  யப்படுகிறது. பேச்சு சிகிச்சை மற்றும் பிசி யோதெரபி போன்ற வசதிகள் இங்கு  இலவசம். சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பு  கல்வியாளர்கள் மற்றும் ஆயாக்கள் இங்கு சேவை செய்கிறார்கள். தற்போது  எஸ்எஸ்கே-வில் ஆசிரியர்கள் உட்பட 6,870 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்  கள்” என அவர் கூறினார்.