மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர அமைச்சரும், பாஜக மூத்த தலை வருமான நிதேஷ் ரானே பேசுகையில், “கேரளா ஒரு மினி பாகிஸ்தான் ஆகும். மக்களவைத் தேர்த லில் தீவிரவாதிகளின் வாக்குகளால்தான் ராகுல் காந்தியும், பிரி யங்காவும் அங்கு வெற்றி பெற்றனர்”என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நிதேஷின் பேச்சிற்கு நாடு முழுவ தும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. இதனையடுத்து அவர் அளித்த விளக்கமும் கேரளாவை மீண்டும் அவ மதிப்பதாகவே உள்ளது. இதுதொ டர்பாக நிதேஷ் அளித்த விளக் கத்தில்,”கேரளாவின் நிலைமையை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவதாகவே உள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்க ளின் நிலையைப் போன்றே, கேரளாவில் உள்ள இந்துக்களின் நிலையும் ஒன்றாக உள்ளது. கேரளாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கவ லையளிக்கிறது. கேரளாவில் லவ் ஜிகாத் வழக்குகள் அதிகரித்து வரு கின்றன. இந்துக்களை மதம் மாற்றுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது” என கூறினார். மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவின் பேச்சிற்கு நாடு முழு வதும் கண்டனம் வலுத்து வருகின்றது. நிதேஷ் ரானே மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.