states

கேரள இடது ஜனநாயக முன்னணி வீடு வீடாக மக்கள் சந்திப்பு இயக்கம்

கேரள இடது ஜனநாயக முன்னணி வீடு வீடாக மக்கள் சந்திப்பு இயக்கம்

கொல்லம் கேரள இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கை களை மக்களுக்குத் தெரிவிப்ப தற்கும், அவர்களின் கருத்துக்க ளைக் கேட்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்க ளும்,  ஊழியர்களும் வீடு வீடாகச் சென்று சந்திக்கத் தொடங்கியுள்ள னர். கொல்லம் போலயாதோடு பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்க ளை சந்திக்க சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தலைமை தாங்கினார். வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கும் இந்த நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி வரை ஒரு வாரம் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தல்கள், அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகள், மதச்சார்பின்மை யைப் பாதுகாப்பதன் முக்கியத்து வம் போன்றவை மக்களுடன் விவாதிக்கப்படுகிறது. கட்சி பாகு பாடு இல்லாமல் அனைத்து வீடுக ளுக்கும் சென்று வெளிப்படை யான விவாதம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து மட்டங்களிலும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்கி றார்கள். பின்னர், வார்டு அடிப்படை யில் குடும்பக் கூட்டங்கள் நடத்தப் படும்.  மேலும், உள்ளூர் அடிப்படை யில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.  இடதுசாரிகளால் மட்டுமே இந்துத்துவா அரசியலைத் தடுக்க முடியும் என்பதையும் மக்க ளுக்குச் சொல்லப்படும். வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒழிப்பது உட்பட ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக ஒரு வலுவான போராட்டம் தொடங்கப் பட்டுள்ளது.