கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளி ஜல்னா நகராட்சி தேர்தலில் வெற்றி
பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 2,621 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த பங்கர்கருக்கு வலதுசாரி தீவிர வாத குழுக்களுடன் தொடர்பு இருக்கிறது. கொலைக்கான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதில் அவர் ஈடு பட்டுள்ளார் என சிபிஐ மற்றும் ஏடிஎஸ் அமைப்புகள் ஏற்கெனவே கண்ட றிந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்ற வாளிகளுள் ஒருவர் பங்கர்கர் என்று விசாரணைக் குழு கண்டறிந்தது. அவரிடமிருந்து பெட்ரோல் குண்டு கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய் யப்பட்டதை அடுத்து, அவர் மீது வெடி பொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரசியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது பல விவா தங்களை எழுப்பியுள்ளது.
