தகுதியான வாக்காளர்கள் விடுபடக்கூடாது பின்தங்கிய பகுதிகளுக்கு கேரள அரசு நேரடி உதவி
திருவனந்தபுரம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) வரை வுப் பட்டியலில் சேர்க்கப்படாத தகு தியுள்ளவர்களின் பெயர்களைச் சேர்க்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கிராம அலுவலகங்களுடன் இணைந்து உதவி மையங்களைத் தொடங்கி, தகுதியாளவர்களுக்கு நேரடியாக உதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியான எந்தவொரு நபரும் பட்டியலில் இருந்து விலக்கப்படாமல் இருப் பதை உறுதி செய்வதற்காக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்ஐஆரின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் 24,08,503 பேரை (24.08 லட்சம்) வரைவுப் பட்டியலில் இருந்து விலக்கியுள் ளது. வரைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் களில், சுமார் 19,32,000 பேர் பட்டி யலில் தங்கள் பெயர்களை உறு திப்படுத்த தங்கள் உறவு குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2002 க்கு முன்னும் பின் னும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆனால் 2002 பட்டி யலில் சேர்க்கப்படாதவர்களும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்க வில்லையெனில், அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்படுவார்கள். 2021 சட்டமன்றத் தேர்தல்களி லும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களிலும் வாக்களித்தவர்கள் இவ் வாறு விலக்கப்பட்டுள்ளனர். இந் தச் சூழலில்தான் உதவி மையங் களை அமைக்க மாவட்ட ஆட்சி யர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. கிராம அலுவலகங்களில் வசதிகள் இல்லையென்றால், அரு கிலுள்ள கட்டிடங்களில் அதற்கான வசதிகள் அமைக்கப்பட வேண் டும். ஒவ்வொரு உதவி மையத்திற் கும் இரண்டு அதிகாரிகள் நிய மிக்கப்பட வேண்டும். உன்னதிகள் (தலித் குடியிருப்புகள்), மலைப் பகுதிகள், கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு நேரடியா கச் சென்று தகுதியானவர்களைக் கண்டறிய வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியா ளர்கள் மற்றும் குடும்பஸ்ரீ பணியா ளர்களின் சேவைகளைப் பயன் படுத்தலாம். 18 வயது நிரம்பிய வர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வ தற்காக கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.