ஊடகவியலாளர் சச்சின் குப்தா
உ.பியில் 5 கிராமங்களில் செப்டம்பர் 23 இரவு திருட்டு நடக்கும் என பெயர்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஐந்து ஊர்களில் ஒன்றில் அந்த இரவு ஒரு வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்திருக்கின்றனர்.
ஊடகவியலாளர் டாக்டர் முகேஷ் குமார்
பிரதமரின் பொருளாதார ஆலோசகரான சஞ்சீவ் சன்யால் நாட்டின் வளர்ச்சிக்கு நீதிமன்றங்கள் தான் தடையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். பாஜகவின் எல்லா தவறுகளையும் ஆதரிக்கும் நிலையில் இருக்கும்போதே நீதித்துறை மீது இப்படி புகார் செய்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் அலோக் ஷர்மா
ஒவ்வொரு வீடும் சுதேசி பொருட்களுக்கான அடையாளமாக மாற வேண்டுமென மோடி சொல்கிறார். அந்த முயற்சியை அவரிடமிருந்து அவர் தொடங்க வேண்டும். வெளிநாட்டு கார்களில் செல்வதை நிறுத்த வேண்டும். வெளிநாட்டு விமானங்களில் பறப்பதை நிறுத்த வேண்டும்.
கொலம்பியா ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ
இனப்படுகொலையை ஏற்காத நாடுகள் சேர்ந்து ஒரு வலிமையான ராணுவத்தை உருவாக்க வேண்டும். இனப்படுகொலை செய்பவர்கள் காசாவுடன் நிறுத்த மாட்டார்கள். விடுதலையை கேட்கும் மக்கள் அனைவரின் மீதும் குண்டுகளை வீசுவார்கள்.