states

img

யுஜிசி-யை  கலைக்கும் மசோதா அவகாசம் கோரிய நாடாளுமன்ற கூட்டுக் குழு

யுஜிசி-யை  கலைக்கும் மசோதா அவகாசம் கோரிய நாடாளுமன்ற கூட்டுக் குழு

தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-இன் ஒரு பகுதியாக, உயர் கல்வித் துறையை சீர்குலைக் கும் நோக்கத்திலும் பல ஒழுங்குமுறை அமைப்புகளை ஒன்றிணைப்பதாகக் கூறி, “விக்சித் பாரத் சிக்சா அதிஷ்டான் (விபிஎஸ்ஏ - VBSA) மசோதா, 2025-ஐ” கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது மோடி அரசு.  உயர்கல்வியை நிர்வகிக்கும் பல் கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தொழில்நுட்பக் கல்வியை நிர்வகிக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகிய அமைப்புகள் கலைக்கப்பட்டு, அவை புதிய விபிஎஸ்ஏ அல்லது இந்திய உயர்கல்வி ஆணை யத்தின் கீழ் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் மசோதா வடிவமைக் கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஆய்வு செய்ய டி.புரந்தேஸ்வரி (பாஜக) தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு (31 உறுப்பினர்கள்) அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், விபிஎஸ்ஏ மசோதாவை ஆய்வு செய்ய அமைக் கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு, தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க இந்த ஆண்டு (2026) மழைக்காலக் கூட்டத் தொடர் வரை அவகாசம் கோரியுள்ளது. இதற்கான தீர்மானம் வியாழக்கிழமை அன்று மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக, 2026 பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதிக்குள் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலை யில், அறிக்கை தாக்கல் செய்ய நாடாளு மன்ற கூட்டுக்குழு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.