ஸ்கேன் இந்தியா
டப்பா மாடல்
சுகாதாரத் துறையில் படுமோசமான “மாடலாக” பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மாறியிருக்கிறது. கழிவுநீர் குடி நீரில் கலந்த விவகாரத்தில் எவ்வளவு பேர் உயிரி ழந்தார்கள் என்று இதுவரை தெரிய வில்லை. கடந்த ஆண்டு நடந்த சம்பவ மொன்றில் இருமல் மருந்தைக் குடித்த 20 முதல் 25 குழந்தைகள் உயிரி ழந்தனர். இதிலும் சரியான எண் ணிக்கை சொல்லப்படவில்லை. இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை ஐந்து வயதுக்குக் கீழானவையாகும். விசாரணையில் பல புதிய தகவல் கள் வருகின்றன. ஒட்டுமொத்த சுகாதா ரத்துறையே சீர்கெட்டுக் கிடக்கிறது என்றும், மருந்துகள் வாங்குவதில் தரத்தில் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலிருந்து கீழேயுள்ளவர்கள் வரையில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கவனிக்கப்பட்டுள்ள னர். பரிசு மழை பொழிந்திருக்கிறது.
ஏமாற்றுவது வாடிக்கைதான்
நீதிமன்றத்தை ஏமாற்றுவது பாஜகவினருக்கு வாடிக்கையான விஷயம்தான். ஒன்றிய அரசின் விவசாயத்துறை அலுவலகம் அமைந் துள்ள கட்டடமான கிருஷி பவன், புதிய கட்டட மாக மாற்றப்படுகிறது. இந்தக் கட்டட வளா கத்தில் ஆறு புராதன மசூதிகள் உள்ளன. புதிய கட்டடம் வருகையில் இந்த ஆறு மசூதிகளையும் தகர்க்க மாட்டோம் என்று 2021ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு உறுதியளித்தது. இதை உத்தரவா தப்படுத்த வேண்டும் என்று 2024இல் தில்லி உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரியம் வழக்கும் தொடர்ந் தது. உறுதிமொழிதான் அளிக்கப்பட்டிருக்கிறதே என்று அதைத் தள்ளுபடி செய்து விட்டார்கள். ஆனால், தற்போது உருவாக்கப்பட்டுள்ள வரை படத்தில் 100 ஆண்டு புராதன கதீமி மசூதி இடம் பெறவில்லை. புதிய கட்டுமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் வரைபடத்திலும் அது இல்லை. மீண்டும் நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்திருக்கிறார்கள்.
தீவிரமடையும் தீண்டாமை
ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தீண்டாமைக் கொடுமைகளின் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது. அம்மாநிலத் தின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அங் கன்வாடி மையத்தில் கடந்த மூன்று மாதங்களாக குழந்தைகள் வருவதில்லை. காரணம் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதியன்று தலித் ஊழியர் ஒருவர் அந்த மையத்தில் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பெற்றோர்கள் புறக்கணித்தி ருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமே, ஆதிக்க சக்தியினர் பக்கம் நிற்கிறது. சமையல் பொருட்களை ஆதிக்க சக்தி யினர் வீடுகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். சமரசம் பேசுகிறார்கள். தலித் ஊழியரை அங்கிருந்து மாற்று வதற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. விசாரணை நடக்கிறது என்று மாவட்ட நிர்வாகம் காலத்தைக் கடத்திக் கொண்டி ருக்கிறது.
ஏமாற்ற பட்ஜெட்
ராஜஸ்தான் மாநில நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமாக முடிந்திருக்கிறது. ஆரவல்லி மலைத்தொடர் பாதுகாப்பு மற்றும் சூரியஒளி மின்சாரத்திற்காக கெஜ்ரி மரங்களைப் பெரிய அளவில் வெட்டுவது ஆகிய இரண்டு விவகாரத்திலும் அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பதற்கான அறிவிப்புகள் இல்லாமல், சுற்றுச்சுவர் கட்டப்போகிறோம் என்று அறிவித்துள்ளனர். எதைச்சுற்றி இந்த சுவர் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கேட்கிறார்கள். ஆரவல்லி மலைத்தொடரில் ஆங்காங்கே தோண்டுவது என்பதை நிறுத்தும் அறிவிப்பல்லவா வந்திருக்க வேண்டும். மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பியுள்ளன. இந்தப் பிரச்சனைகளை மக்களவையில் அம்ரா ராம் உள்ளிட்ட சில ராஜஸ்தான் எம்.பி.,க்கள் கையில் எடுத்துள்ளனர். வளத்தைப் பாதுகாக்கும் மக்களின் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
