சிபிஐ(எம்-எல்) எம்.பி., சுதாமா பிரசாத்
நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர் சங்கங்களும் ஏற்கனவே அமலில் உள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிர்த்து வருகின்றன. ஒரு சில தொழிலதிபர்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறது.
ஐயுஎம்எல் எம்.பி., முகமது பஷீர்
திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத் தொகுப்பு முதலாளிகளுக்காக தொழிலாளர்களின் உரிமைகளைத் தியாகம் செய்கிறது. பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அபாயகரமான சூழல்கள் குறித்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
கொரோனா காலத்தின் போது ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகைகள், தொற்றுநோய் முடிந்த பிறகும் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படாதது ஏன்? முதியோரைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் நலனை உறுதி செய்வதற்கும் சட்டத்தில் போதிய வழிவகைகள் செய்யப்படவில்லை.
நேஷனல் டாஸ்டாக் வளைதளம்
தில்லி ஜந்தர் மந்தரில் யுஜிசி-யின் சமத்துவ விதிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த வலதுசாரி ஊடகம் போராட்டத்தை கெடுக்க முயன்றது. மாணவர்கள் சார்பில் பத்திரிகையாளர் நிதி ரத்தன் வலதுசாரி ஊடகத்திடம் சில கேள்விகளை எழுப்பினார். இதனால் வலதுசாரி ஊடகச் செய்தியாளர் சாதி ஆணவத்துடன் பேசினார். இது “கோடி மீடியா” ஊடகங்கள் பதற்றத்தில் இருப்பதை காட்டுகிறது.
