headlines

img

தேசபக்தியல்ல; துரோகம்!

தேசபக்தியல்ல; துரோகம்!

இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் களத்தில் உணர்ச்சிப் பிழம்பாகத் திகழ்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல் இன்று மீண்டும் ஒரு விவாதப் பொருளாக்கப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல. 1937-இல் நேரு, சுபாஷ் சந்திர போஸ், மௌலானா ஆசாத் போன்ற ஆளுமைகளும், மகாகவி ரவீந்திரநாத் தாகூரும் இணைந்து எடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இன்று “திருத்துகிறோம்” என்ற பெயரில் சிதைக் கத் துடிப்பது தேசத்தின் பன்முகத்தன்மை மீதான நேரடித் தாக்குதலாகும்.

ஆனந்த மடம் நாவலின் ஒரு பகுதியாகப் பிறந்த இப்பாடலின் பிந்தைய சரணங்கள் தாய் நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத்  தெய்வமாகச் சித்தரிக்கின்றன. இந்தியா என்பது ஒரு மதம் சார்ந்த தேசமல்ல; அது பல நம்பிக்கைகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்க ளின் சங்கமம். “உருவ வழிபாட்டை ஏற்காத பிற மதத்தினர் இப்பாடலை முழுமையாக ஏற்பதில் தயக்கம் காட்டுவார்கள்” என்ற தாகூரின் கருத்தை ஏற்று, முதல் இரண்டு சரணங்களை மட்டும் தேசியப் பாடலாக அறிவித்தது அன் றைய தலைவர்களின் முதிர்ச்சியைக் காட்டு கிறது. அது ஒரு ‘வெட்டு’ அல்ல; அது இந்தியா வின் பன்முகத்தன்மையை இணைக்கும் ‘பாலம்’.

இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் தேசத்தின் விடு தலையில் ஒரு துளியளவும் பங்களிக்காதவர் கள். மாறாக, தேசத்தைக் காட்டிக் கொடுத்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வெள்ளையர்களிடம் மண்டியிட்டவர்கள். 

தேசப்பற்று என்பது குடிமக்கள் தங்கள் நாட்டின் மீது கொள்ளும் நேர்மையான அன்பு. அதைச் சட்டத்தின் மூலமோ, மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனை என்ற மிரட்டல் மூலமோ ஒருவரிடம் உருவாக்கிவிட முடியாது.

தமிழகத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ போன்ற மாநில அடையாளங்களை மறைமுகமாகப் புறக்கணிக்கும் முயற்சியாகவும், ஒற்றைக் கலாச் சாரத்தைத் திணிக்கும் ‘நவ-பாசிச’ நடவடிக்கை யாகவுமே இந்த அரசாணை அமைந்துள்ளது. மேற்கு வங்கத் தேர்தலை முன்னிறுத்தி ‘துர்க்கை’ தொடர்பான வரிகளை அரசியல் லாபத்திற் காக மீட்டெடுப்பது மத உணர்வுகளையும் அரசி யலையும் கலந்து குளிர்காயும் செயலாகும்.

இந்தியா இன்று வரை வலிமையான நாடாக இருப்பதற்குக் காரணம் இங்கு நிலவும் வேற்றுமையில் ஒற்றுமைதான். மக்களின் தனி நபர் விருப்பத்தில் தலையிட்டு, ஒரு குறிப்பிட்ட மதக் குறியீடுகள் கொண்ட பாடலைப் பாடக் கட்டாயப்படுத்துவது ஜனநாயகத்தின் ஆன்மாவைச் சிதைக்கும் செயலாகும்.

தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாத ரத்தை கட்டாயமாக்குவது தேச ஒற்றுமையை வளர்க்காது; மாறாக, தேவையற்ற பிரிவினை யையும் கசப்பையும் உருவாக்கும். இது தேசப்பற்று அல்ல; தேச ஒற்றுமைக்குச் செய்யும் துரோகம்.