நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்
திருச்சி, பிப். 12 – நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்க ளாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அனை த்து சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கூட்டு நட வடிக்கை குழு அமைக்கப்பட்டு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு என்ற பேரமைப்பு அமைக்கப்பட்டது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் த.கா.முருகானந்தம், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநில ஒருங்கிணைப்பாளர்களாக மீ.சுஜாத்அலி, மு. தாமோதரன், வி.எம். வெங்கிடுசாமி, சக்திவேல், கார்த்திகேயன் சுப்பையா, கருமாரியப்பன் ஜம்பு, பஞ்சவர்ணம், பாலசுப்பிர மணியன், ஏழுமலை, செந்தில்குமார், சத்தியமூர்த்தி, சிவக்குமார், ராமச்சந்திரன், நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். நிதி காப்பாளராக அல்லாபிச்சை நியமிக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சேலம் மாநாட்டில் அறி வித்ததுபோல், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், மாநகராட்சிகளுக்கென தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற்கட்டமாக பிப்.11 அன்று சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், உயர் அலுவலர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிப்பது என்றும், இரண்டாம் கட்டமாக பிப்.13 அன்று அனைத்து ஊழியர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவதுடன், அன்று மாலை 5.45 மணிக்கு அலுவலகங்கள் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக பிப்.18 அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை மாநில ஒருங்கிணைப் பாளர் த.கா. முருகானந்தம் தெரிவித்தார்.