articles

img

வெற்று முழக்கங்களும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடும்! - டி.ஆர். பாலு, எம்.பி.,

வெற்று முழக்கங்களும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடும்! - டி.ஆர். பாலு, எம்.பி

ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கும் நிதியமைச்சர் அவர்க ளுக்கு எனது வாழ்த்துகள். 2047-இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவோம் என்று ஒரு நீண்ட காலக் கனவை நிதியமைச்சர் விதைக் கிறார். செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் எனப் பல நவீனத் திட்டங்களை அடுக்குகிறார்கள். ஆனால், இவற்றைச் செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான உந்துதல் அரசிடம் இருக்கிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.  சரிந்து வரும் நம்பகத்தன்மை  வருவாய் செலவினத்தைக் குறைத்து, மூல தனச் செலவினத்தை அதிகரிப்பதாக அரசு தம் பட்டம் அடிக்கிறது. ஆனால் எதார்த்தம் என்ன? கடந்த நிதியாண்டின் இறுதியில் வருவாய் வரவு ₹78,886 கோடி சரிந்துள்ளது. மூலதனச் செல வினம் (Capital Expenditure) சுமார் ₹1,44,376 கோடி என்ற அளவில் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இவ்வளவு பெரிய வீழ்ச்சி இருக் கும்போது, இந்த பட்ஜெட்டின் நம்பகத்தன்மை எங்கே இருக்கிறது? மானியங்களைக் குறைப்பதாக பட்ஜெட் டில் அறிவிப்பதும், அடுத்த ஆறே மாதங்க ளில் கூடுதல் மானியம் கேட்டு துணை மானி யக் கோரிக்கைகளை (Supplementary Demands) கொண்டு வருவதும் இந்த அரசின் வாடிக்கையாகிவிட்டது. இது ஒரு திட்டமிடப்படாத நிதி மேலாண்மைக்குச் சான்று.  காகிதத்தில் இருக்கும் திட்டங்கள்  பெரிய திட்டங்களை அறிவிப்பதோடு சரி, அவை செயல்பாட்டுக்கு வருவதில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-இல் அறிவிக்கப்பட்ட ‘வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை’ (ELI) திட்டம் இதுவரை வேகம் எடுக்கவில்லை. அதேபோல், ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியுடன் அறிவிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (R&D) எந்த முன்னேற்றமும் இன்றி முடங்கிக் கிடக்கிறது.  விவசாயமும் - அமெரிக்காவுடனான விபரீத ஒப்பந்தமும்  விவசாய வளர்ச்சி 4.4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகச் சரிந்துள்ளது. இந்தச் சூழலில், அமெ ரிக்காவுடன் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப் பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம், வெளிநாட்டு விவசாயப் பொருட்கள் இந்திய சந்தைக்குள் தடையின்றி நுழைய வழிவகை செய்யும். இது நம் நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடி யாக அமையும். தேங்காய் மற்றும் கோகோ பயிர்களுக்குச் சிறப்பு ஆதரவு தருவோம் என்று கூறி விட்டு, வெறும் ₹350 கோடி மட்டுமே ஒதுக்கி யிருப்பது யானைப் பசிக்குச் சோளப்பொரி போன் றது. உலகளவில் வாழை ஏற்றுமதியில் முன்னணி யில் இருக்கும் தமிழ்நாட்டின் வாழை விவசாயத்தை ஊக்குவிக்க எந்தத் திட்டமும் இல்லை.  தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சகங்கள்  ஒன்றிய அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  (UPA) ஆட்சியில் 2004 முதல் 2014 வரை சேதுசமுத்திரத் திட்டம், சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்டச் சாலை, திருச்சி ஐஐஎம் (IIM), சென்னை கடல்சார் பல்கலைக்கழகம் என 69 பிரம்மாண்டத் திட்டங்களை வழங்கினோம். ஆனால், கடந்த 12 ஆண்டுகால பாஜக ஆட்சி யில் மதுரை எய்ம்ஸ் (AIIMS) ஒரு செங்கலோடு நின்றதே. தமிழ்நாட்டின் மெட்ரோ ரயில் திட்டங்க ளுக்கு நிதி வழங்க இந்த அரசு மறுக்கிறது. அதே நேரம், புனே, இந்தூர் போன்ற சிறிய நகரங்களு க்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வாரி வழங்கு கிறது. மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கோ ரிக்கையை இந்த அரசு காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. பொய்த்துப் போன வாக்குறுதிகள் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், ஒவ் வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் ரூபாய், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வோம் - இவையெல்லாம் என்னவானது? சுவாமி நாதன் கமிட்டியின் பரிந்துரைகள் இன்று தேர்தல் கால முழக்கங்களாக மட்டுமே சுருங்கிவிட்டன. மற்றொரு புறம், இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக ₹92 என்ற நிலையை நோக்கி அதிவேகமாகச் சரிந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? வெற்று வார்த்தை ஜாலம் இந்த பட்ஜெட்டைப் பிரதமர் ‘வரலாற்றுச் சிறப்பு மிக்கது’ என்கிறார். ஆனால், சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில்துறையினர் என அனைவரும் இந்த பட்ஜெட்டால் ஏமாற்றம டைந்துள்ளனர். தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான, வெற்று வார்த்தை ஜாலங்களால் நிறைந்த இந்த பட்ஜெட்டை எங்களால் ஏற்க முடியாது. மக்களவையில் ஆற்றிய பட்ஜெட்  விவாத உரையின் பகுதிகள்