ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது அமித் ஷா காவல்துறை தாக்குதல்
இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்
புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழக (ஜேஎன்யு) துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துலிபுடி பண்டிட் கடவுளுடன் சாதிகளை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். துணைவேந்தரின் அடாவடி கருத்துகள் மற்றும் பல் கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் தொடர்பாக நட வடிக்கை எடுக்கக் கோரி, கல்வி அமைச்சகம் நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர். மாணவிகளின் ஆடைகள் கிழிந்தது அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப் பாட்டில் உள்ள தில்லி காவல்துறை தடியடி மூலம் வலுக்கட்டாயமாக போராட்டத்தை அப்புறப்படுத்தி யது. மேலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்ட னர். கைது செய்யப்பட்ட மாண வர்கள் கபாஷேரா மற்றும் சாகர்பூர் ஆகிய காவல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும், அதில் சில மாணவிகளின் ஆடைகள் கிழிந்ததாகவும், பலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் ஜேஎன்யு மாணவர் சங்கம் குற்றம்சாட்டி யுள்ளது. மாணவர் சமூகத்தை அச்சுறுத்த... இந்நிலையில், ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க தலைவர் ஆதர்ஷ் எம் சாஜி, பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதியாக பேரணி சென்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தின் (JNUSU) நிர்வாகிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வரை அவர்கள் விடுவிக்கப்படா ததை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கல்வி அமைச்சகத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணி சென்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குத லானது, ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குத லாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாண வர் பிரதிநிதிகளைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பது, மாண வர் சமூகத்தைப் பயமுறுத்து வதற்கும், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்கும் எடுக்கப்படும் முயற்சியையே வெளிப்படுத்து கிறது. ஜேஎன்யு துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துலிப்புடி பண்டிட் தலை மையில் உருவாகியுள்ள நெருக்கடி யை மறைக்கும் முயற்சியாகவே தில்லி காவல்துறையினர் இந்த அடாவடி நடவடிக்கையை மேற் கொண்டுள்ளனர். துணைவேந்த ரின் சாதியக் கருத்துக்களும், இதர முறையற்ற செயல்களும் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகச் சூழலுக்குக் களங்கமாக மாறி யுள்ளன. மாணவர்களின் நியாய மான கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அடக்கு முறை, மாணவர் சங்க நிர்வாகி களை நீக்கம் செய்தல் மற்றும் காவல்துறையினரின் தலையீடு ஆகியவற்றை நிர்வாகம் கையாண்டு வருகிறது. இந்த அணுகுமுறை பல்கலைக்கழ கத்திற்கே அவமானமாகும். கைது செய்யப்பட்டுள்ள ஜேஎன்யு மாண வர்களை தில்லி காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோருகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கம் கண்டனம் ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் (JNUTA) மாணவர்கள் மீதான தடி யடி மற்றும் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கைது செய்யப்பட்ட மாணவர் களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
