states

ஜம்மு-காஷ்மீர் வீராங்கனை சிம்ரன் பாலா சாதனை ஸ்ரீநகர் : ஜனவரி 26ஆம் தேதி தில்லி

ஜம்மு-காஷ்மீர் வீராங்கனை சிம்ரன் பாலா சாதனை ஸ்ரீநகர் : ஜனவரி 26ஆம் தேதி தில்லி

கடமைப் பாதையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், சிஆர்பிஎப் படைப்பிரிவை ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் சிம்ரன் பாலா வழிநடத்தவுள்ளார். சிஆர்பிஎப் உதவி கமாண்டன்ட் ஆகப் பணியாற்றும் பெண் இவர். ஆண்கள் பிரிவு உள்ளிட்ட முழுமையான படைக்கு ஒரு பெண்  தலைமை தாங்குவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டின் பெண் சக்தியை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரிலிருந்து வந்து இந்த உயரிய இடத்தைப் பிடித்துள்ள சிம்ரன் பாலாவிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக அவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.