சீன முதலீடுகள் வருகை : இந்திய நிலைபாட்டில் மாற்றம் ஏன்?
புதுதில்லி இந்திய அரசு ஒப்பந்தங்களை சீன நிறுவ னங்கள் ஏலம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்க ஒன்றிய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்திய அரசு ஒப்பந் தங்களை சீன நிறுவனங்கள் ஏலம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான தொடர் ராஜிய பேச்சுவார்த்தை கள், அரசு அதிகாரிகளின் சந்திப்புக்களைத் தொடர்ந்து எல்லைப் பதற்றங்கள் குறைந்து வரும் சூழலில், இந்தியா மற்றும் சீனா இடை யே நேரடி விமான சேவைகள் மீண்டும் தொ டங்கப்பட்டன. மேலும் சீன நிபுணர்களுக்கான வணிக விசாக்களை விரைவுபடுத்தும் நடவ டிக்கைகளையும் இந்தியா எடுத்தது. இந்நிலை யில் தான் தற்போது சீனாவுடன் வணிக உறவு களை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையிலான உயர்மட்டக் குழுவும் இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப் பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கை களை சில அரசு தரப்பு அதிகாரிகள் மூலம் பெற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாக வெளி யிட்டது. எனினும் இந்த கட்டுப்பாடுகள் தளர்வு குறித்தான இறுதி முடிவானது பிரதமர் அலுவல கத்தில் தான் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டால், சுமார் 700 பில்லியன் டாலர்கள் முதல் 750 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்திய அரசு ஒப்பந்தங்க ளில் சீன நிறுவனங்கள் போட்டியிடுவது தடுக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. அதாவது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, சீன அரசுக்குச் சொந்தமான சிஆர்ஆர்சி (CRRC) நிறுவனம் 216 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ரயில் தயாரிப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. மேலும் பல அரசுத் துறைகள் உதிரிபாக பற்றாக்குறை மற்றும் திட்ட தாமதங்களைச் சந்தித்தன. குறிப்பாக மின்சாரத் துறைக்கான உபகரணங்களைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் உள்ள தடைகளின் காரணமாக இந்தியாவின் அனல் மின் திறனை 307 கிகா வாட்டாக (GW) உயர்த்தும் திட்டம் பாதிக்கப் பட்டது. இந்திய-சீன உறவு சுமூகமாக இருந்த காலத்தில், இந்தியாவில் சீனாவின் நேரடி முதலீடு குறைவாகவே இருந்தது. 2000 முதல் 2021 வரை இந்தியாவின் மொத்த நேரடி அந்நிய முதலீட்டில் சீனாவின் பங்கு 1 சதவிகி தத்துக்கும் குறைவாகவே இருந்தது. இருப்பினும், 2020-க்கு முன் இந்தியா வுக்குள் வந்த சீனாவின் ஒட்டுமொத்த (நேரடி மற்றும் மறைமுக) முதலீடுகள் பெரும்பாலும் ‘வரி சொர்க்கங்கள்’ (Tax havens) வழியாக வந்துள்ளன. எனவே அக்காலக்கட்டத்தில் அத னுடைய முதலீடுகளின் ஆளவைக் கணக்கிடு வது கடினம் எனக் கூறப்படுகிறது. 2020 ஏப்ரலில் சீனாவின் மீது கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்ட பிறகு, 2023-24 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை யில், சீனாவிலிருந்து வரும் நேரடி அந்நிய முதலீடு இந்தியாவின் உலகளாவிய விநியோ கச் சங்கிலிப் பங்கேற்பை அதிகரிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் உதவும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் பரிந்துரைத்தது. சீனாவிலிருந்து வரும் முதலீடுகள் அமெ ரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வ றிக்கை தெரிவித்தது. பெரும்பாலான நாடுகளின் சந்தைகளில் சீனா வலுவாக இருப்பதால், சீன நிறுவனங்களைச் கூட்டுச் சேர்க்காமல் சீனா விற்கு மாற்றாக விநியோகச் சங்கிலிகளை இந்தியாவால் ஈர்க்க முடியாது. அதுதான் இந்தி யாவின் இந்த மாற்றத்திற்கான காரணங்களுள் ஒன்று என சில வணிக முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
