கர்னூல் விபத்தில் 20 பேர் பலி எதிரொலி ஸ்லீப்பர் கோச் பேருந்துகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க தொழில்துறை நிபுணர் குழு கோரிக்கை
ஹைதராபாத் தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் இருந்து கர்நாடகா மாநி லம் பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசு பேருந்து (ஸ்லீப்பர் கோச் - படுக்கை வசதி), ஆந்திர மாநிலம் கர்னூ லில் வெள்ளிக்கிழமை அன்று தீ விபத்தில் (இரு சக்கர வாகனம் மோதலால் டீசல் டேங்க்) சிக்கியது. இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், படுக்கை வசதி பேருந்து களில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உரு வாக்க தொழில்துறை நிபுணர் குழு (பெயர் சார்ந்த தகவல் குறிப்பிடவில்லை) கூறியுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அக்குழு,”ஸ்லீப்பர் பெர்த் (படுக்கை வசதி)” பேருந்துகளில் அவசரகால வெளியேற்றங்கள் ஒரு பெரிய பிரச்ச னையாகவும், சவாலாகவும் உள்ளது. பொதுவாக சாதாரண இருக்கை கொண்ட பேருந்தில் ஒரு அவசரநிலை ஏற்பட்டால் உட னடியாக அங்கிருந்து உடனே நகரலாம். வெளியே வந்துவிடலாம். ஆனால் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் அப்படி அல்ல. அவ சரகால வெளியேற்றத்தை நெருங்க முயற்சிக் கும் போது பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. படுக்கை வசதி பேருந்துகளில் கேலரி இடம் (இருக்கை இல்லாத மாடம்) குறைவாக உள்ளது. குறிப்பாக ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழும்போது ஒரு வழியைக் கண்டு பிடிப்பது மிக ஆபத்தானது. மேலும் திரைச் சீலைகள் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின் றன. கர்னூல் தீவிபத்தில், திரைச்சீலைகள் தீ பற்றியதன் மூலம் பாதிப்பு மிக மோசமான அளவில் ஏற்பட்டுள்ளது” என கூறப் பட்டுள்ளது. அதிவேகம் தான் காரணம் தீ விபத்தில் சிக்கிய பேருந்து “வி காவேரி” டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த பேருந்து சுவீடன் நாட்டு தயாரிப் பான ஸ்கேனியா (Scania) ஆகும். ஒடிசா மாநிலத்தின் ராயகடா ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 7 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் பழமையானது ஆகும். 12 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் இருந்தா லும் அதிவேகம், தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிகளவில் பயணிகளை ஏற்றியது என 16 போக்குவரத்து விதி மீறல்களுக்கு விபத்துக்குள்ளான பேருந்து அபராதம் செலுத்தப்படவில்லை. அதி வேகத்தால் கர்னூலில் விபத்தில் சிக்கியது என செய்திகள் வெளியாகியுள்ளது.
வேகக்கட்டுப்பாடு கருவி தான் ஒரே தீர்வு இந்தியாவில் உள்நாட்டு
தயாரிப்புகளை விட வெளிநாட்டு தயாரிப்பு பேருந்துகள் தான் அதிகளவில் உள்ளன. இதில் சிறப்பு வசதிகள் மற்றும் அதிவேகமாக செல்லக் கூடிய வால்வோ (சுவீடன்), ஸ்கானியா தயாரிப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த வகை பேருந்துகள் சாதாரணமாக 100 கிமீ வேகத்தில் உணர்திறன் இன்றி (சொகுசு வசதிகள் இருப்பதால் வேகம் தெரியாது) இயங்க கூடியது ஆகும். இதனால் தான் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த இந்தியாவில் வால்வோ, ஸ்கானியா பேருந்துகள் மிக மோசமான அளவில் விபத்தில் சிக்குகின்றன. இதனை தவிர்க்க ஒரே தீர்வு வேகக்கட்டுப்பாடு கருவி தான் என போக்குவரத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
