states

img

மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமையால் பெண் மருத்துவர் தற்கொலை

மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமையால் பெண் மருத்துவர் தற்கொலை

மும்பை பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் வியாழக் கிழமை அன்று இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உள்ளங்கையில்,”எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார். 5 மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்” என்று எழுதப்பட்டிருந்தது. தற்கொலை செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்டான் மாவட்ட துணை கண்காணிப்பாள ருக்கு (டிஎஸ்பி) அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது. டிஎஸ்பிக்கு எழுதிய கடிதத்தில், பல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல், உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவ டிக்கை எடுக்கக் கோரியிருந்தார். தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவ காரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாத நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பெண் தற்கொலை விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.