ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல் பாஜக குதிரை பேரம்
ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக வெள்ளிக் கிழமை அன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. 4 இடங்க ளுக்கான இந்த தேர்தலில் உமர் அப்துல்லாவின் ஆளுங்கட்சி யான தேசிய மாநாடு கட்சி 3 இடங்க ளில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது. பாஜகவுக்கு வெற்றி பெற 4 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப் பட்டது. அந்த 4 பேரும் எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தி ருந்தனர். ஆனால் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதால், 4 பேரும் பாஜகவுக்கு வாக்களித்துவிட்டனர் என தோல்வியடைந்த தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இம்ரான் நபி தார் மேலும் கூறுகையில், “வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜகவிடம் இல்லை. அவர்களு க்கு 28 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். அப்படி இருக்கும் போது எப்படி அவர்கள் 32 வாக்கு களை பெற்றனர்? இதன்மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது தெளிவாகிறது” என்றனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த சவுத்ரி முகமது ரம்ஜான், சாஜித் கிச்லூ, குர்விந்தர்சிங் மற்றும் பாஜகவை சேர்ந்த சத்சர்மா உள்ளிட்ட 4 பேரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மாநி லங்களவை செல்ல உள்ளனர்.
