அதிகரித்துக் கொண்டிருக்கும் தலித்துகள் மீதான தாக்குதல்கள்
மகாபாரதத்தில் வரும் ஏகலை வன் குறித்து அனைவரும் அறிவோம். ஆனால் அது பாண்டவர்களின் வீரம் மற்றும் நீதிக்கான போராட்டத்தின் பிரகாசமான கதைகளில் பதிக்கப்பட முயற்சிக்கப்படுகிறது. தற்காப்புத் திறமையின் மீது தேர்ச்சி பெற ஏகலைவனின் இடைவிடாத முயற்சியின் மீது துரோணாச்சாரியார் காட்டிய கொடூ ரமான செயல், காலத்தால் அழியாத காவி யத்தின் பிரமாண்டமான கதையில் ஒரு அதிர்ச்சியூட்டும் குறிப்பாகத் தெரிகிறது.
இந்துத்துவத்தின் நவீன பிரதிநிதி கள், இந்திய கடந்த காலத்தை மறுகட்ட மைக்கும் தங்கள் தீய செயலில், சாதிய அடுக்கால் கட்டப்பட்டுள்ள இப்போதைய சமூகப் படிநிலையை, ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மறுபெயரிடுவதில் மும்முர மாக உள்ளனர். ஆர்எஸ்எஸ்-ஆல் ஈர்க்கப் பட்ட இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் ‘ஆராய்ச்சியாளர்கள்’ சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் மோடி ஆற்றிய உரையில் ஒரு போலி வரலாற் றைக் கட்டமைத்திட அதிகம் உழைத்துள் ளனர்.
இதுபோன்ற பயிற்சிகளில் ஏகலை வர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
மூர்க்கத்தனமான சனாதனமும் பிராமணியமும்
உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது தலித் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஒரு வழக்கறிஞரால் தாக்கப்பட்டபோது, எந்த அளவிற்கு சனாதனமும், பிராமணிய மும் மூர்க்கத்தனமான முறையில் நடந்து கொண்டது என்பது முன்னுக்கு வந்துள் ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஜுராஹோ கோவில் வளாகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள விஷ்ணுவின் சிலைக்கு பூஜை செய்யக் கோரிய மனுவை நீதிபதி கவாயின் அமர்வாயம் நிராகரித் தது. அந்த பொருத்தமான சட்டம் அத்த கைய மூர்க்கத்தனமான கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்க ளின் வற்புறுத்தலைத் தடுக்கவில்லை.
அப்போது மகா விஷ்ணுவைப் பற்றி கிண்ட லாக கவாய் கூறிய வார்த்தைகளை அவர்க ளால் ஜீரணித்துக்கொள்ள முடிய வில்லை. இதற்கெதிராக நாடு முழுவதும் பரவ லான சீற்றம் ஏற்பட்டபோதிலும், இது போன்ற மோசமான செயல்கள் நடக்கும் போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்திடும் பிரதமர் கூட இப்போது அவ்வாறு இல்லாமல் ஏதேனும் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் தன்னுடைய ட்விட்டர் வலைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாயிடம் பேசினேன். இன்று முன்னதாக உச்சநீதிமன்ற வளா கத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி யுள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இட மில்லை.
இது முற்றிலும் கண்டிக்கத்தக் கது. இதுபோன்ற சூழ்நிலையை எதிர் கொண்ட நீதிபதி கவாய் காட்டிய அமை தியை நான் பாராட்டினேன். இது நீதித் துறையில் விழுமியங்கள் மற்றும் நமது அரசமைப்புச்சட்டத்தின் உணர்வை வலுப் படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.” ஆனாலும் சமூக ஊடகங்களில் கேலி செய்திடும் பேர்வழிகள் தங்கள் பதிவு களைத் தொடர்ந்து மேற்கொண்டு வரு கின்றனர்.
ஒடுக்குமுறையை அம்பலப்படுத்த உயிரே விலையாக
மற்றொரு மோசமான வழக்கு ஒன்றில் ஹரியானாவில் சில நாட்களுக்கு முன்பு, ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி, புரன் குமார் என்பவர் மர்மமான சூழ்நிலை யில் இறந்துள்ளார். அவரிடமிருந்து கைப் பற்றப்பட்ட இறுதிக் குறிப்புகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியவகையில் இருந் துள்ளன.
அவர் சாதி அடிப்படையில் துன் புறுத்தலுக்கும், அவமானத்திற்கும் ஆளா கியுள்ளார் என்பதை அவை குறிக்கின்றன. சாதிச் சார்பு மற்றும் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தியதற்காக ஒரு மூத்த காவல் துறை அதிகாரியே தன் உயிரை விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது மிகவும் வருந்தத்தக்கதாகும். இந்தப் பாகுபாடு மற்றும் துன்புறுத்த லுக்கு எதிராக அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் உட்பட அரசாங் கத்தின் அனைத்து மட்டங்களிலும் எழுத் துப்பூர்வ புகார்களை அளித்த போதி லும், அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
மாநில உள்துறை அமைச்சகத்தை இப்போது முதலமைச் சரே தம்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே அளவுக்கு வருந்தத்தக்க வகை யில், 2025 அக்டோபர் 1 அன்று, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் ஹரி ஓம் என்ற தலித், ஒரு கும்பலால் “ட்ரோன் திருடன்” என்று குற்றம் சாட்டப்பட்டு கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டு, ரயில் தண்டவாளத்தின் அருகில் வீசி எறி யப்பட்டுள்ளார்.
உ.பி., ராஜஸ்தான், ம.பி-இல் 55 சதவீத தலித் படுகொலைகள்
உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள் கும்பல்களால் படுகொலைகள் செய்யப் படுவது மிக வேகமாக அதிகரித்து வரு கின்றன. 2022ஆம் ஆண்டில் பட்டியல் சாதியினர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 51,656 வழக்குகளில், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 12,287 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மொத்த வழக்குகளில் 23.78 சதவீதம் ஆகும். அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 8,651 (16.75 சதவீதம்) மற்றும் மத்தியப் பிரதேசம் 7,732 (14.97 சதவீதம்) எனப் பதி வாகியுள்ளன. அரசாங்கத்தின் ஒவ்வொரு ஆண்டு அறிக்கையும், நாடாளுமன் றத்தில் பதிலளிக்கும் போதும், இவ்வாறு ஒவ்வோராண்டும் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
இது வெறும் புள்ளிவிவரங்கள் மட்டு மல்ல. தலித்துகளுக்கு எதிரான குற்றங்க ளும், அட்டூழியங்களும் நாளும் அதிகரித் துக்கொண்டிருப்பதை நாம் தினமும் காண் கிறோம். கும்பல்கள் மேற்கொள்ளும் படு கொலைகள், வகுப்பறை வன்முறைகள், வெறுப்புக் குற்றங்கள், தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் என உதாரணங்கள் முடிவற்றவைகளாகும். காவல்துறையின் அலட்சியமும், கொலை புரியும் கும்பல்களுக்கு அது உடந்தை யாக இருப்பதும் கூட இந்த கொடுமையை மேலும் அதிகரிக்கிறது.
1950ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் தீண்டாமை தடைசெய் ளப்பட்டிருந்தாலும், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும், அட்டூழி யங்களையும் வகைப்படுத்தும் முதல் சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டமாகும். ஆனால் அதிகரித்து வரும் சீரழிவு, இந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மிகக் குறைவாகவே தண்டனை அளிக்கின்றன என்பதையும், அவை நீதி மன்ற அறையை ஒருபோதும் எட்டுவதில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
அமித் ஷாவின் அம்பேத்கர் வெறுப்பு
சமீபத்தில் மாநிலங்களவையில் அர சமைப்புச்சட்டம் குறித்த விவாதத்தின் போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒருசில ஆண்டுகளுக்கு முன் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு, “அம்பேத்கரின் பெயரை உச்ச ரிப்பது இப்போதெல்லாம் ஃபேஷனாகி விட்டது” என்று கிண்டலும் கேலியும் கலந்த குரலில் பேசியதைப் பார்த்தோம். தலித்துக ளுக்கு எதிராக அவர்கள் அவதூறுகளை அடிக்கடி வீசுவது, அவர்களை கடவுளுட னான அவர்களின் தொடர்பில் அவர்களை ‘ஏழாவது சொர்க்கத்திற்கு’ இட்டுச் செல்லக் கூடும். இவ்வாறு படிநிலை சார்ந்த நால் வர்ண பிராமண ஒழுங்கைக் கொண்டு வருவதற்கான அவர்களுடைய முயற்சிகள் இப்போது அதிகமாகி இருக்கின்றன.
அரச மைப்புச்சட்டத்தின் கீழான அனைத்துப் பதவிகளிலும் பல மாநில அரசாங்கங்க ளின் தலைமையிலும், அரசமைப்புச் சட்டத்தைப் புதைத்துவிட்டு, அந்த இடத்தில் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் அரசமைப்பு உருவாக்கு வதற்கான பாஜக-வின் தாகம் திருப்தி யடைந்திடவில்லை.
பன்முகத்தன்மை, சமத்துவத்தை மறுக்கும் இந்துத்துவா
இந்திய தேசியம் ‘பன்முகத்தன்மை யில் ஒற்றுமை’ என்ற கொள்கையின் அடிப்ப டையில் பிறந்தது. இது ஒரு கூட்டாட்சி, பன்முகக் கலாச்சார அரசியலைத் தழுவி யது. ஆனால் ஆர்எஸ்எஸ் அதை ஒரு மத அடையாளத்தால் இயக்கப்படும் தேசி யத்தால் மாற்ற விரும்புகிறது. கோல்வால் கர் பரிந்துரைத்தபடி, அந்த அமைப்பின்கீழ் இந்துக்கள் அல்லாதவர்கள் ‘இரண்டாம் தர குடிமக்களாக’ இருப்பார்கள். அரச மைப்புச் சட்டம் ஒரு மதவெறி மற்றும் பாசிச இந்துத்துவா அரசின் ஆர்எஸ்எஸ் திட்டத்திற்கு சரியானதொரு எதிர்ப்பை வழங்கி வருகிறது. ஆனால் அவர்கள் கொண்டுவர விரும்பும் அரசமைப்புச்சட்ட மானது, அனைத்து குடிமக்களுக்கும் சமமான குடியுரிமை என்ற கொள்கையை மறுக்கும் ஒன்றாகும்.
இவ்வாறு பிராமணியத்தால் இயக்கப் படும் மனுஸ்மிருதியின் சட்டங்களை நியா யப்படுத்துவதற்கான இந்த கலப்படமற்ற முயற்சிக்கு எந்த விளக்கமும் தேவை யில்லை.
இது தற்செயலாக நிகழ்வது அல்ல என்பது தெளிவாகவே தெரி கிறது. இந்திய அரசமைப்புச்சட்டம் மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீது ஆர்எஸ்எஸ்-இன் நன்கு பதிவு செய்யப் பட்ட விரோதமான சிந்தனையையே அமித் ஷா வெளிப்படுத்தினார். அவரது கருத்துக்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களாக அமைந்திடும் சமூக மற்றும் பாலின சமத்துவத்தின் அடிப்படையையே தகர்ப்பதற்கான ஒரு தாக்குதலாகும்.
மனுஸ்மிருதியே சிறந்த அரசமைப்புச் சட்டமாம்
சாவர்க்கரின் கருத்துகள் அவர்களின் சித்தாந்த அடிப்படையை விளக்குகின்றன. அரசமைப்புச் சட்டத்தை “இந்தியனுக்குப் பொருந்தாதது” (“un-Indian”) என்று சாவர்க்கர் திட்டவட்டமாக அழைத்ததோடு மட்டுமல்லாமல் மனுஸ்மிருதியையே சிறந்ததொரு அரசமைப்புச்சட்டம் என்று வானளாவப் புகழ்ந்தார்.
இப்போதைய அரசமைப்புச்சட்டம், இந்திய மக்களின் கலாச்சாரத்திற்கும், மத நெறிமுறைகளுக்கும் “அந்நியமானது” என்று கூறி, 1949 நவம்பர் 30 அன்று ஆர்எஸ்எஸ்-இன் ஊதுகுழலான ஆர்க னைசர் இதே கருத்துக்களை சந்தே கத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியது. இவ்வாறு மனுஸ்மிருதி மீது ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு இருக்கும் மோகம்தான், மதச்சார்பற்ற ஜனநாயக அரசை வலி யுறுத்தும் இப்போதைய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்துத்துவா சக்திகளின் விருப்பத்திற்கும் இடையிலான ஆழ மான சித்தாந்த இடைவெளியை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.
மனுஸ்மிருதியின் சாதி அடிப்படை யிலான பாகுபாட்டை ஊக்குவிப்பது இந்திய அரசமைப்புச்சட்டத்தில் பொ திந்துள்ள சமத்துவக் கொள்கைகளுக்கு நேரடி முரண்பாடாகும். சமத்துவம் மற்றும் சமூக நீதியில் வேரூன்றிய ஒரு சமூகத்திற்கான அடித்தளங்களை அமைப்பதே அரசமைப்புச்சட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
சாதியச் சமூகத்தை நேரடியாகவே ஆதரிக்கிறார்கள்
இப்போது அவர்கள் தங்களுடைய நால்வர்ணத்தின் அடிப்படையிலான சாதியச் சமூகத்தை ஆதரிக்கும் கொள்கை யை கூறும் அளவிற்கு நேரடியாகவே வெளிவந்துவிட்டார்கள்.
வரலாற்று ரீதியாக, இந்துத்துவா சக்திகள் அரசமைப்புச் சட்டத்தை உரு வாக்கியவர்கள் ஆதரித்த அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளுடன் நேரடியா கவே முரண்படத் துவங்கிவிட்டார்கள். தலித்துகளின் மீது ஏவப்படும் தாக்கு தல்களுக்காகத் தங்களுக்குத் தண்டனை எதுவும் கிடைக்காது என்ற தைரியம் இவர்க ளுக்கு வந்திருப்பது இதன் அடிப்படை யில்தான்.
எனவே, இந்த தலித் எதிர்ப்பு இந்துத் துவா கொள்கையையும், இதில் ஈடுபடு பவர்களையும் எதிர்த்துப் போராடுவது இன்றைய அவசரத் தேவையாகும்.
அக்டோபர் 22, 2025, தமிழில் : ச.வீரமணி