states

img

பாஜக ஆளும் ம.பி.,யில் கொடூரம் உலகக்கோப்பை விளையாட வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

பாஜக ஆளும் ம.பி.,யில் கொடூரம் உலகக்கோப்பை விளையாட வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

இந்தூர் 13ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக் கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. 26ஆவது லீக் ஆட்டம் சனிக் கிழமை அன்று பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான இந்தூரில் நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய - தென் ஆப்பி ரிக்க மகளிர் அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீராங்கனைகள் புதன்கிழமை அன்று இரவே இந்தூர் ரேடிசன் ப்ளூ ஹோட் டலுக்கு வருகை தந்தனர். இந்நிலையில், ஆஸ்திரே லிய வீராங்கனைகள் இருவர் வியாழக்கிழமை அன்று அதி காலை ரேடிசன் ப்ளூ ஹோட்ட லில் இருந்து அருகிலுள்ள ஒரு  பிரபலமான மற்றொரு உணவ கத்திற்கு சாலை வழியாக ஜாக்கிங் சென்று கொண்டி ருந்தனர். கஜ்ரானா சாலையில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஆஸ்திரேலிய வீராங்க னைகளிடம் பாலியல் அத்துமீற லில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்ப வத்தில், கண்காணிப்புக் கேம ராக்கள், அருகில் இருந்தவர் கள் கொடுத்த ஆதாரங்கள் அடிப் படையில் அகில் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவ்ஜித் சைகியா வருத்தம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கண்டனம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பல்வேறு அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் சாலையில் கூட சாதா ரணமாக நடமாட முடிய வில்லை. இதுதான் பாஜக ஆளும் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு? என நாடு முழுவதும் கடும் கண்டனம் குவிந்து வரு கின்றன.