பணி நேரம் தொடர்பான கெடுபிடிக்கு கடும் எதிர்ப்பு பணியை புறக்கணித்த விமானிகள், பணியாளர்கள் முடங்கியது இண்டிகோ விமான சேவை
புதுதில்லி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. ராகுல் பாட்டியாவுக்குச் சொந்தமா னது ஆகும். இந்நிலையில், விமானிகள், விமான பணியா ளர்கள் பற்றாக்குறை காரணமாக இதுவரை இல்லாத வகையில், கடந்த 5 நாட்களாக இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்க டியைச் சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தினமும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப் பட்ட நிலையில், புதனன்று மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் 10 மணிநேரம் வரை தாமதமாகின. லட்சக்கணக் கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வெள்ளியன்றும் இண்டிகோ விமான சேவையில் சிக்கல் நீடித்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 22 விமானங்களின் சேவைகள், பெங்களூருவில் (கர்நாடகா) 10 விமானங்கள் என நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இண்டிகோ அறிக்கை நெருக்கடி நிலைமை தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது. விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு சிக்கல் காரண மாக தங்களது விமான சேவை பாதிக்கப் பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் ரத்து செய்த 1,232 விமானங்களில் மட்டும் கிட்டத்தட்ட 62% விமான ஊழியர் பற்றாக்குறை காரணமாக அமைந்தது என்றும், டிசம்பர் மாதத்திலும் விமான சேவை பிரச்சனைகள் தொ டர்ந்து தீவிரமடைந்து வருகிறது என இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள் ளது. விமானச் சேவைகளில் ஏற்படும் ரத்து மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான நட வடிக்கைகளை இண்டிகோவுடன் இணைந்து மதிப்பீடு செய்து வருவதாக விமான போக்கு வரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமானிகள் போராட்டம் காரணமா? மோசமான வானிலை, விமானப் போக்கு வரத்து அமைப்பில் அதிகரித்த நெரிசல் மற்றும் விமான நிலையக் கட்டுப்பாடுகள், தொழில் நுட்பப் பிரச்சனைகள், விமானிகள் பற்றாக்குறை காரணமாக நெருக்கடி ஏற்பட்டதாக இண்டி கோ நிறுவனம் கூறி வருகிறது. ஆனால் விமானி கள், விமான பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக இண்டிகோ நிறுவனம் இதுவரை உறுதியான விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் பணி நேரம் தொடர்பான விதிகள் கடுமையாக இருப்பதாக கூறி விமானிகள், ஊழி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தான் தீவிர விமானிகள் பற்றாக்குறையை இண்டிகோ நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது என்றும், ரத்தான 1,232 விமானங்களில், 755 விமானங்கள் பணியாளர்கள் பற்றாக்குறை யால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
