states

விபத்துகளின் போது தொழிலாளர்களைக் குறை கூறுவதை இந்திய ரயில்வே நிறுத்த வேண்டும்

விபத்துகளின் போது தொழிலாளர்களைக் குறை கூறுவதை இந்திய ரயில்வே நிறுத்த வேண்டும்

சிஐடியு  கண்டனம்

புதுதில்லி விபத்துகளின் போது தொழி லாளர்களைக் குறை கூறு வதை ரயில்வே நிர்வாகம்  நிறுத்த வேண்டும் என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நவம்பர் 4 அன்று “மெமு” பயணி கள் ரயில், சிக்னலை கவனிக்காமல் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலு டன் மோதியது. இந்த கோர விபத்  தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20  படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் விபத்தில் இறந்த லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) வித்யா சாகர் உட்பட 11 பேரையும் சிஐடியு  நினைவுகூர்ந்து அஞ்சலி மற்றும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.  அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் துயரத்தையும் சிஐடியு பகிர்ந்து கொள்கிறது. தொடர் விபத்து ரயில்வே அமைச்சரின் (அஸ் வினி வைஷ்ணவ்) மேம்பட்ட பாது காப்பு குறித்த பெரிய அறிவிப்பு களுக்கு இடையே, ரயில் விபத்து கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.  ரயில் பாதுகாப்பு ஆணையரின் சட்டப்பூர்வ விசாரணை தொடங்கு வதற்கு முன்பே, விபத்துக்கு இறந்த  லோகோ பைலட் தான் காரணம் என குற்றம் சாட்டும் ரயில்வேயின் மனோபாவத்தை சிஐடியு கடுமை யாகக் கண்டிக்கிறது. இது விசார ணையை மிக மோசமான அளவில்  பாதிக்கிறது. குறிப்பாக நவதாராளவாத ஆட்சியின் கீழ், பயணிகள் மற்றும்  ரயில்வே ஊழியர்களின் பாது காப்பை உறுதி செய்வதில் ரயில்வே யின் அலட்சியப் போக்கை சிஐடியு  மற்றும் ஏஐஎல்ஆர்எஸ்ஏ (All India  Loco Running Staff Association) போன்ற ரயில்வே ஊழியர்களின் பல யூனியன்கள் தொடர்ந்து சுட்டிக்  காட்டி வருகின்றன. தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் கடுமையான பற்றாக்  குறையை எதிர்கொண்டு வரு கின்றன. ஜனவரி 1, 2025 நில வரப்படி, பிலாஸ்பூர் டிவிஷனில் மட்டும் 2,556 பணியிடங்கள் காலி யாக உள்ளன. இது அங்குள்ள பணி யிடங்களில் சுமார் 39% ஆகும். முழு  மண்டலத்திலும் 4,330 பணியிடங் கள், அதாவது 37% பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 மாதங்களில் சுமார் 500 லோக்கோ பைலட்டுகள் ஓய்வுபெற்ற அல்லது  தங்கள் வேலைகளை விட்டுவிட்ட னர். இது ஓய்வு மற்றும் வார விடுப்பு கள் மறுக்கப்படும் தற்போதைய ஊழியர்களுக்கு தாங்கமுடியாத பணிச்சுமை மற்றும் அழுத்தத்தை உருவாக்குகிறது. அடிக்கடி நடக்கும் விபத்துகள், நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள், குறிப்பாக லோகோ பைலட்டுகள் மற்றும் பாதை பராமரிப்பு ஊழியர்  களின் மரணங்களுக்கு வழிவகுக்  கும்   உண்மையான பிரச்சனை களைத் தீர்க்க ரயில்வே நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சிஐ டியு கோருகிறது. ரயில்களின் அதி கரித்த எண்ணிக்கை, அதிர்வெண்,  வேகம், சுமை மற்றும் நீளம் ஆகிய வற்றுக்கு ஏற்ப பாதுகாப்புத் தரங்  களை மேம்படுத்த ரயில்வே உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மெமு, இஎம்யு, டிஇஎம்யு போன்ற ரயில்களில் ஒற்றை ஓட்டுநர் முறை யை நிறுத்த வேண்டும். மேலும், ரயில்வே நெட்வொர்க்கு முழுவதும்  ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பை நிறுவ வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.