ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி தலைமையில் களமிறங்கும் “இந்தியா” கூட்டணி
பீகார் சட்டமன்ற தேர்தல்
இந்தாண்டு இறுதியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்த லுக்கான இந்தியா” கூட்டணிக் கட்சி களின் (மாநில அளவில் மகா கூட் டணி - மகாகத்பந்தன்) முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் தில்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் (ஆர்ஜேடி) தேஜஸ்வி, பீகார் காங் கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஜய் குமார் மற்றும் சிபிஐ (எம்எல்) மாநிலச் செயலாளர் குணால் ஆகியோர் இந்த கூட்டத் தில் கலந்து கொண்டனர்.
இரண்டாம் கட்ட ஆலோசனை
தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 17 அன்று பீகார் தலைநகர் பாட்னா வில் உள்ள ஆர்ஜேடி கட்சி தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. 3 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்று இந்த ஆலோ சனை கூட்டத்தில் ஆர்ஜேடி தலை வர் தேஜஸ்வி, காங்கிரஸ் தலை வர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய இடதுசாரி கட்சிகளின் தலை வர்கள் மற்றும் விகாஷீல் இன் சான் கட்சித் தலைவர்கள் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சார உத்தி உள்ளிட்ட அனைத்து விஷயங்க ளும் விவாதிக்கப்பட்டது.
தேஜஸ்வி தலைமையில்...
கூட்டத்தின் முடிவில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி தலைமையில் பீகார் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வோம் என “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட் டாக அறைகூவல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியா ளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்ல வாரு கூறுகையில்,”ஆர்ஜேடி தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி தலை மையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, தேர் தல் பிரச்சாரம், மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கி ணைப்பு போன்ற அனைத்து விச யங்களையும் ஆர்ஜேடி கட்சி தலை மையேற்று கவனிக்கும். “இந் தியா” கூட்டணியில் ஒற்றுமை உள் ளது. ஆனால் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி யில் குழப்பம் நீடிக்கிறது. தற்போது துணை முதலமைச்சராக உள்ள சாம்ராட் சவுத்ரி (பாஜக மூத்த தலை வர்) தேசிய ஜனநாயக கூட்டணி யின் பீகார் முதலமைச்சர் வேட்பா ளராக கூட நியமிக்கப்படலாம். நிதிஷ் குமார் பற்றி எதுவும் கூற முடியாது” என அவர் கூறினார்.
ஒன்றுபட்டு தான் முடிவு
தொடர்ந்து தேஜஸ்வி பேசுகை யில்,”நாங்கள் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அவசரப்பட வேண்டாம். பாஜக கவலைப்படட்டும். ஆனாலும் “இந்தியா” கூட்டணி கட்சிகளின் ஒன்றுபட்ட முடிவுகளுக்கு பின்பே முதலமைச்சர் வேட்பாளர் உள் ளிட்ட அனைத்து முடிவுகளும் எடுக் கப்படும்” என அவர் கூறினார்.
ஆர்எல்ஜேபி கூட்டணியில் சேர்க்கப்படுமா?
சமீபத்தில் பாஜக கூட்டணி யில் இருந்து விலகிய ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை (ஆர்எல்ஜேபி - பசுபதி பரஸ்) “இந் தியா” கூட்டணியில் சேர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேஜஸ்வி,”அடுத்த கூட்டத்தில் இதுதொடர்பான விஷயம் விவா திக்கப்படும்” என அவர் கூறினார்.