“பாஜகவினரைப் போல பிழைப்புக்காக பொய் சொல்ல மாட்டேன்”
ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் சுனில் சர்மா,”2014 மற்றும் 2024 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்காக உமர் அப்துல்லா பாஜக தலைமையை அணு கினார். குறிப்பாக, 2024இல் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு உடன்பட்டால் கூட்டணி அமைக்கத் தயார் என்று அவர் பேரம் பேசினார். இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதாக இருந்தால், உமர் அப் துல்லா குர்ஆன் மீது சத்தியம் செய்யத் தயாரா?” எனக் கூறினார். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”மாநில அந்தஸ்துக்காகவோ அல்லது வேறு எந்தக் காரணத்துக்காகவோ, 2024இல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க நான் முயற்சிக்கவில்லை என்பதை, புனித நூலான குர்ஆன் மீது சத்தியம் செய்கி றேன். சுனில் சர்மாவைப் போல் பிழைப் புக்காக நான் பொய் சொல்வதில்லை” என பதிலடி கொடுத்துள்ளார்.