states

img

நாக்பூர் வன்முறையில் தொடர்பு இருப்பதாக முஸ்லிம் நபரின் வீடு இடிப்பு

நாக்பூர் வன்முறையில் தொடர்பு இருப்பதாக முஸ்லிம் நபரின் வீடு இடிப்பு

மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசின் புல்டோசர் அராஜகம்

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வலியுறுத்தி முதலமைச்சர் தேவேந்திர பட்னா விஸின் சொந்த ஊரான மத்திய நாக்பூரின் சிட்னிஸ் பூங்கா பகுதி யில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த குண்டர் கள் மார்ச் 17 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் முஸ்லிம் மக்களின் புனித நூலான “திருக்குர் ஆன்” எரிக்கப்பட்டதாக  தகவல் வெளியாக, இந்து -  முஸ் லிம் மக்களிடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியது.

அருகில் இருந்த மருத்துவமனை மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகள் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் வாகனங்கள், கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்நிலையில், நாக்பூர் வன் முறைக்கு முக்கியக் காரணமாக இருந்ததாக பாஹிம் கான் என்ப வரின்  வீட்டை ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்புடன் பொ துப்பணித் துறை அதிகாரிகள் திங்க ளன்று காலை புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

 நாக்பூர் வன்முறையில் மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா காவல்துறை முஸ்லிம் மக்களை மட்டுமே கைது செய்து சிறையில்  அடைத்தது. பாஜக மற்றும் ஆர்எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா  குண்டர்கள் மீது எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ஒருதலைபட்சமாக பாஹிம் கான் என்ற முஸ்லிம் இளைஞரின் வீடு இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இத னால் நாக்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.