states

இமாச்சல், ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு சிம்லா : இமயமலையில் உள்ள

இமாச்சல், ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு சிம்லா : இமயமலையில் உள்ள இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லா உட்பட மாநிலத்தின் 8 மாவட்டங்களில்  மிதமான பனிப்பொழிவு முதல் கடும் பனிப்புயல் வரை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல, ஜம்மு-காஷ்மீரின் பள்ளத்தாக்கு (காஷ்மீர்) முழுவதும் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவால் வான் மற்றும் சாலை வழி போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெள்ளியன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக சுமார் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.