states

img

இந்திய உளவு அதிகாரியைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த அமெரிக்கா!

நியூயார்க்/தில்லி, அக். 18 - கடந்த ஆண்டு அமெரிக்காவில் படுகொலை  செய்யப்பட்ட சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை வழக்கில் இந்தியாவின் ராணுவ அதிகாரியான விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது மோடி அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பயங்கரவாதப்பட்டியலில் உள்ள பன்னூன் அமெரிக்க குடியுரிமை கொண்டவர். அவர், கடந்த ஆண்டு அமெரிக்காவிலேயே வைத்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகித்து வந்த நிலையில் 11 மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்திய அதிகாரி விகாஸ் யாதவ் மீது நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.  இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளி டம் நடத்திய விசாரணைக்குப் பிறகு  வியாழ னன்று இந்த குற்றச்சாட்டை அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாட்  மில்லர் முன்வைத்துள்ளார்.  பன்னூன் கொலை வழக்கில் கடந்த ஆண்டு நிகில் குப்தா என்பவர் செக் குடியரசு நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அவர்  மூலமாக ஒரு நபரை பணிக்கு அமர்த்தி பன்னூனை இந்திய அதிகாரியான விகாஸ் யாதவ் கொலை செய்ததாக அமெரிக்கா குற்றம்  சாட்டியுள்ளது.

யார் இந்த விகாஸ் யாதவ் ?

1984-ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த  விகாஸ் யாதவ், இந்தியாவின் துணை ராணு வப்படையான சிஆர்பிஎப்-இல் துணை கமாண்டராக பணி புரிந்துள்ளார். கவுண்ட்டர் இன்டலிஜன்ஸ், பாதுகாப்பு மேலாண்மை, உளவு பார்த்தல் உள்ளிட்ட பல சிறப்பு பயிற்சிகளைப் பெற்ற அவர், இந்திய உள வுத்துறையான ‘ரா’ விலும் பணியாற்றி யுள்ளார்.  நிகில் குப்தா உடன் இணைந்து பன்னூனை கொலை செய்யும் திட்டம் தீட்டிய போது ‘அமானத்’ என்ற பெயரை விகாஸ் பயன்படுத்தியுள்ளார். இவரை இந்திய அமைச்சரவை தான் பணியமர்த்தியது என்பதையும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்பிஐ, விகாஸ் மீது பணமோசடி, கூலிப்படை மூலம் கொலை செய்தல் உள்ளிட்ட வழக்கு களை பதிவு செய்துள்ளது. மேலும் இவரைத் தேடப்படும் குற்றவாளியாக  அறிவித்துள்ளது.  முன்னதாக, அமெரிக்கா நடத்திய விசாரணையின் போது, விகாஸ் யாதவ், இந்திய அரசின் பாதுகாப்புத்துறையில் தற்போது பணிபுரியவில்லை என இந்திய தூத ரகத்தில் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படு கிறது.

கனடாவைத் தொடர்ந்து அமெரிக்கா

இந்திய அரசால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட சீக்கியப் பிரிவினைவாதி  ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை தகவலின் அடிப்படையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.  மேலும் சமீபத்தில் இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஸ்னோய் என்ற கூலிப்படைக் கும்பல் உதவியுடன் ஹர்தீப்  சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட தாகவும், இதன் பின்னணியில் இந்திய உளவு அதிகாரிகள் இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் இந்திய அரசு இந்த  குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மறுத்து விட்டது. தற்போது, பன்னூன் மற்றும் நிஜ்ஜார் கொலை வழக்கில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைத்து உரு வாகியுள்ள ‘பைவ் ஐஸ்’ என்ற உளவு அமைப்பே இந்த கொலைகளில் இந்தியாவிற்கு உள்ள தொடர்பு குறித்து தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.