states

img

ஒப்பந்தத்தை பெற்று பாஜகவிற்கு  ரூ.50 கோடி வழங்கிய குஜராத் நிறுவனம்

ஒப்பந்தத்தை பெற்று பாஜகவிற்கு  ரூ.50 கோடி வழங்கிய குஜராத் நிறுவனம்

தேர்தல் சட்ட விதிகளின்படி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறப்படும் நன்கொடைகளை தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சி கள் தெரிவிக்க வேண்டும். இத்தகைய சூழலில் 2023-2024 நிதியாண்டில் அர சியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவ ரங்கள் தேர்தல் ஆணையத்திடம் அளிக் கப்பட்டுள்ளன.  அதில் அரசியல் கட்சிகள் மொத்த மாக ரூ.2,544 கோடி நன்கொடை பெற்றுள் ளது. இதில் ரூ.2,243 கோடி ஆளும் பாஜக பெற்றுள்ளது. மீதமுள்ள கட்சிகள் ரூ.301 கோடிகள் பெற்றுள்ளன. இதில் காங்கி ரஸ் கட்சி ரூ.281 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

88 சதவீதம் பாஜகவுக்கு

2023-2024ஆம் நிதியாண்டில் அரசி யல் கட்சிகளுக்கு வரப்பெற்ற நன்கொ டையில் 88 சதவீதத்தை கார்ப்பரேட் நிறு வனங்கள் அளித்துள்ளன. அவற்றில் பெரும்பாலான தொகை பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக தில்லியைச் சேர்ந்த பாரதி எண்டர்பிரைசஸ் அறக்கட்டளை ரூ.880 கோடி நன்கொடை அளித்துள் ளது. இந்நிறுவனம் பாஜகவிற்கு 85 சதவீதத்திற்கும் அதிகமான தொகை யை அளித்துள்ளது. அதே போல டிஎல்எப், ஆர்செலார் மிட்டல், நிப்பான் ஸ்டீல் தலா ரூ.100 கோடியும், மாதா புரா ஜக்ட்ஸ் ரூ.75 கோடியையும் நன்கொ டையாக அளித்துள்ளன.

ஒப்பந்தம் பெற்று  பாஜகவுக்கு ரூ.50 கோடி

கவுகாத்தி (அசாம்) தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி ஒப்பந்தத்தை பெற்றுள்ள அகமதாபாத்தை சேர்ந்த கட்டு மான நிறுவனமான டிஆர்ஏ ரூ.50 கோடி நன்கொடையை பாஜகவுக்கு மட்டுமே அளித்துள்ளது. மற்றொரு அகமதாபாத் நிறுவனமான இண்டாஸ் பார்மா ரூ. 25 கோடியை பாஜகவுக்கு நன் கொடையாக அளித்துள்ளது. இந்த 2  குஜராத் நிறுவனங்களும் 2022-2023 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்களை வாங்கியது என தகவல் வெளியாகி யது. இந்த நன்கொடைகள் அனைத்தும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவ தற்கு முந்தைய நிதியாண்டில் அளிக் கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.