ஒடிசாவில் போதகருக்கு சாணிப்பால் ஊட்டுவது மனிதாபிமானமற்ற செயல் பினராயி விஜயன் கண்டனம்
ஒடிசாவில் ஒரு போதகருக்கு இந்துத்துவா கும்பல் மாட்டுச் சாணம் ஊட்டி கொடூரமான தாக்குதல் நடத்தி இருப்பது தனிப்பட்ட குற்றம் அல்ல, மாறாக சங் பரிவாரத்தால் வளர்க்கப்படும் வன்முறை மற்றும் வெறுப்புச் சூழலின் பிரதிபலிப்பாகும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகை யில்,“ஒரு மனிதனுக்கு மாட்டுச் சாணம் ஊட்டுவது மிகவும் மனிதாபிமான மற்றது. பாஜக தலைமையிலான அர சாங்கங்களின் மௌனமும் உடந்தையு மாக இருப்பதும் இதற்கு ஊக்கம் அளிக்கிறது. கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இளம் மகன்களின் கொடூ ரமான கொலைக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகும், அதே சகிப்புத்தன்மையற்ற சக்திகள் இன்னும் தண்டனையின்றி செயல்படுகின்றன என்பது தெளிவாகி றது. ஒடிசாவில் மட்டுமல்ல, நாடு முழு வதும், நமது நாட்டின் மதச்சார்பற்ற அமைப்பு தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறது. அரசியலமைப்பு ஜன நாயகத்தை பலவீனப்படுத்தி சங்பரி வாரத்தின் வகுப்புவாத அரசியலைத் திணிக்கும் இந்த ஒருங்கிணைந்த முயற்சியை கடுமையாக எதிர்க்க வேண்டும்” என பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
