பாஜகவிற்கு ஆதரவாக பீகாரில் 3 கோடி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் சதி
அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மாநி லத்தில் ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பலை உள்ள தால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் “மகா கூட்டணி” ஆட்சியை கைப் பற்றும் என உளவு மற்றும் கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால் பாஜக தேர்தல் ஆணையத்தின் உதவியோடு சிறும்பான்மையினர், தலித், பழங்குடியினர் என 3 கோடி வாக்காளர்களை நீக்க சதி திட்டங்களை தொடங்கியுள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஞாயிறன்று பீகார் மாநிலம் முழுவதும் வாக்கா ளர்களை நீக்க செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்தது. அதில்,”வாக்காளர்கள் தேவை யான ஆவணங்களை வழங்கினால், வாக்கா ளர் பதிவு அதிகாரியின் சரிபார்ப்பு பணிகள் எளிதாக இருக்கும். ஒருவேளை தேவை யான ஆவணங்களை நீங்கள் வழங்க முடியா விட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இறுதி யில் தேர்தல் பதிவு அதிகாரி முடிவெ டுப்பார்” என தேர்தல் ஆணையம் வாக்காளர்க ளை நீக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்கா ளர்களை நீக்க தேர்தல் ஆணையம் விளம் பரம் செய்துள்ளதற்கு ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பாஜகவிற்கு ஆதரவாக பீகாரில் 3 கோடி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சித்து விளை யாட்டை கண்டித்தும், வாக்காளர் பட்டியல்க ளில் சிறப்பு திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா எம்.பி., ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்), மக்கள் உரிமைக் கழகம் (பியுசிஎல்), அரசியல் விமர்சகர் யோகேந்திர யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலை வர் மஹுவா மொய்த்ரா எம்.பி., ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை அவசரமாக பட்டிய லிட மனுதாரர்கள் வேண்டுகோளை விடுத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் திங்கள்கிழமை அன்று மனுக்களை அவசரமாக பட்டியலிட ஒப்புக்கொண்டது. தொடர்ந்து ஜூலை 10 அன்று மனுக்களை விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறி வித்துள்ளது.
ஆதார், குடும்ப அட்டைகளை வாங்க மறுப்பது ஏன்?
பீகாரில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்களில் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அட்டை இல்லை. 1987லிருந்து 2004ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள், தம் தாய், தந்தை ஆகிய இருவரில் ஒருவரின் பிறப்பிடச் சான்றை வழங்க வேண்டும். 2004ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள், தம் பெற்றோர் இருவரின் பிறப்பிடச் சான்றும் வழங்க வேண்டும். இதனால் பீகாரில் தோராய மாக 3 கோடி பேர் வாக்குரிமை இழக்க உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தாக்கல் செய்த மனுவில் இதனை குறிப்பிட்டு,“பீகார் வாக்காளர்கள் பிறப்புச் சான்றிதழ் ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறை கண்டனத்துக்குரியது. இது ஏழைகள், முஸ்லிம், தலித் வாக்காளர்க ளை நீக்குவதற்கான நடவடிக்கையாகும். ஏற்கனவே வாக்காளர் சேர்ப்புக்கு பெறப்பட்ட ஆதார் அட்டை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அட்டை உள்ளிட்டவற்றை வாங்க மறுப்பது ஏன்? அதுமட்டுமின்றி, ஒருமாத இடைவெளியில் புதிய ஆவணங்களை தேர்தல் ஆணையம் கேட்பது நியாயமற்றது. இது சாதாரண மக்களுக்கு சிரமத்தை மட்டுமே ஏற்படுத்தும். எனவே இந்த புதிய விதியை ரத்து செய்ய வேண்டும்” என மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.