பாட்னா பீகாரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
243 சட்டமன்ற தொகுதிகளை கொண்டபீகாரில் 18 மாவட் டங்களின் 121 தொகுதிக ளுக்கு நவம்பர் 6ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு (64.66 %) நடைபெற்றது. தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக் கான 2ஆம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை அன்று (நவ.11) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த ஒரு வாரமாக “இந்தியா” கூட்டணி (மாநில அளவில் மகா கூட்டணி) உள்ளிட்ட அரசி யல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், ஆர்ஜேடி, காங்கிரஸ், விஐபி போன்ற “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் எளிய மக்கள் சந்திப்பின் மூலம் பிரச்சாரம் கொண்டன. இந்நிலையில், 2ஆம் கட்ட தேர்தலுக் கான பிரச்சாரம் ஞாயிறன்று மாலை 6 மணி யுடன் ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய திங்க ளன்று ஒருநாள் இடைவெளி அளிக்கப் பட்டுள்ள நிலையில், தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் அதே போல காலியாக உள்ள 7 மாநி லங்களின் (ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, பஞ்சாப், மிசோரம், ஜார்க்கண்ட், தெலுங்கானா) 8 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல் (நவ., 11 அன்று வாக்குப்பதிவு) பிரச்சாரமும் ஞாயிறன்று ஓய்ந்தது.