“பீகார் தேர்தல் முடிவில் சந்தேகம்”
பீகார் தேர்தல் முடிவில் சந்தேகம் இருப்பதாக “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள் ளார். இதுதொடர்பாக திங்களன்று தனது இல்லத்தில் (மகா ராஷ்டிரா - மும்பை) நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறு கையில்,”தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயகத்தின் புதிய கணிதம் புரிந்து கொள்ள முடியாத அளவில் உள்ளது. ஒரு தேர்தலை எடுத்துக்கொண்டால் ஒரு கட்சி அல்லது கூட்டணியின் பிரச்சா ரத்தில், அதிக கூட்டத்தை எதிர்கொள் ளும் கூட்டணியே ஆட்சிக்கு வரும். ஆனால் பீகாரில் காலியாக நாற்காலி களுடன் பிரச்சாரம் மேற்கொண்ட கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. குறிப் பாக பீகாரில் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டமே பீகார் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதினாலும், ஒவ் வொரு நாளும் துன்பப்படும் பீகார் மக்களுக்கு ரூ.10,000 பணம் பெரியளவு க்கு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க முடி யாது. அதனால் பீகார் தேர்தல் முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என அவர் கூறினார்.
