144 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி 101 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
101 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் மொத்தம் 270க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர். இதில் 241 பேர் விமானத்தில் பயணித்தவர்கள் என்ற நிலையில், 30க்கும் மேற்பட்டோர்கள் விமானம் விழுந்த இடமான மேகானி குடியி ருப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் 7 மருத்துவ மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் அவர்களது உறவினர்களுடன் பொருந்தியுள்ளன என்றும், அதில் 101 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளதாகவும் குஜராத் உள்துறை அமைச்சர் ரமேஷ் குமார் சங்கவி தகவல் தெரிவித்துள்ளார்.